Posts

Showing posts from November, 2014
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Facebook Debate 4 - 15/09/14

Image
Post:

இந்தித் திணிப்பு எதிர்ப்பு

Comments:

Appandai Raj Ananthakumar:
இப்போதெல்லாம் இந்தி பேசும் தமிழனை ஒரு தமிழனாக கூட யாரும் மதிப்பதில்லை. #SelfExample.

Me:
நான் மதிக்கிறேன் :-) யாரைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது உங்கள் விருப்பம். உண்மையில் தமிழகம் இந்தியை எதிர்த்ததேயில்லை :-) இந்தித் திணிப்பையே எதிர்த்திருக்கிறது. நீங்கள் இந்தி பேசுவதை எதிர்ப்பவர்களுக்குத் தமிழ் முழுமையாகத் தெரியுமா என்பதே சந்தேகம்தான். அவர்கள் சொல்வதை வைத்து மட்டும் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் :-)

Appandai Raj Ananthakumar:
"இந்தியை எதிர்த்ததேயில்லை இந்தித் திணிப்பையே எதிர்த்திருக்கிறது" - இடக்கரடக்கல்.

Me:
நாம் கடைக்குச் சென்று செரிலாக் வாங்குவதற்கும் நீ செரிலாக்தான் சாப்பிடவேண்டும் என்று வீட்டுக்கு வந்து கையில் திணிப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான்ணே :-) இடக்கரடக்கல் எல்லாம் இல்லை.

Appandai Raj Ananthakumar:
செரலாக் எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. எளிதாக அனைவரும் பெறலாம். அதை வாங்கினால் உடலுக்கு நல்லது. இதை விட சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ஹார்லிக்ஸ் அரிதாக தான் கிடைக்கிறது. விலையும் கூடுதல். எளிதாக அனைவருக்கும…

காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 4

Image
முன்தொடர்ச்சி:
காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 1 காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 2 காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 3

முன்குறிப்பு: லேண்ட்மார்க்கில் மனு பகவான்(21ம் நூற்றாண்டு மனிதர்) எழுதிய ‘The Peacemakers: India and the Quest for One World’ என்ற புத்தகத்தைக் கண்டவுடனே காணாததைக் கண்டது போல் ஐநூறு ரூபாய்க்கு அடித்துப் பிடித்து வாங்கினேன். ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பகத்தின் 237 பக்க வெளீயீடு. காந்தியைப் போல் நேருவும் இன்று எவ்வளவு தேவைப்படுகிறார் என்று அறிய இப்புத்தகம் அவசியம். இப்புத்தகம் சொல்லிய தகவல்களில் வெகு சில தகவல்களை மட்டும் இங்கே முடிந்தவரை தருகிறேன்.

(தொடர்கிறது)

          ஆண்டு 1944. அமெரிக்க பிரிட்டன் படைகள் ஃப்ரான்சிலிருந்து கிழக்கு முகமாக ஜெர்மனி நோக்கி முன்னேறத் துவங்கியிருந்த சமயம். ரஷ்யப் படைகள் மேற்கு முகமாக ஜெர்மானியர்களைத் துரத்தி பெர்லின் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் மூன்று பெரிய சக்திகளான பிரிட்டன், அமெ…

Facebook Debate 3 - 17/09/14

Image
Post:

பெரியார், இடஒதுக்கீடு

Comments:

Appandai Raj Ananthakumar:
தமிழ்நாட்டில் "கிரீமி லேயர்" என்ற பொருளாதாரம் மற்றும் சமூகம் சார்ந்த இட ஒதுக்கீடு இன்னும் ஏன் அமலுக்கு வரலவில்லை.? 199 கட் ஆப் வாங்கிய ஒரு கிராமப்புற ஏழை FC மாணவனுக்கு சீட் நிராகரிக்கப்படுகிறது. அதே சமயம் 189 கட் ஆப் வாங்கிய ஒரு பணக்கார மாநகர SC/ST மாணவனுக்கு சீட் கிடைக்கிறது? வெறும் பிறந்த ஜாதியின் ரீதியில் கொடுக்கப்படும் இட ஒதுக்கீடு நியாயமானதா?

வருணாசிரம தர்மத்தால் பாதிக்கப்பட்ட வகுப்பினர் தம்மீது ஆதிக்கம் செலுத்திய அப்போதைய உயர்குலத்தோர் மீது செலுத்தும் ஒருவகை பழிவாங்கும் நடவடிக்கையே தற்போதைய ஜாதி வாரியான இட ஒதிக்கீட்டிற்கு ஆணிவேர். இது ஒரு மறுதலை பாகுபாடே (reverse discrimination) தவிர, இதில் சமூக நலன் ஒன்றும் இல்லை.

Me:
அதை நோக்கி நகர்தல் அவசியம்தான் அண்ணா. ஆனால் பொருளாதாரம் சார்ந்த இடஒதுக்கீடு பற்றிப் பேசுபவர்கள் எத்தனை பேர் இடஒடுக்கீட்டின் ஆதார நோக்கமான சமூக நீதியை இணைத்துப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. பொருளாதார சுதந்திரம் தேவைதான். ஆனால் இன்றும் ஒரு பணக்கார பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந…