சரிங்...சாரிங்...
”இனிமே 75% அட்டெண்டன்ஸ் இருந்தாதான் ஹால் டிக்கெட் கொடுப்போம், என்ன?” “சரிங்” “அட்டெண்டன்ஸ் ஷீட்டை மாசா மாசம் எங்களுக்கு அனுப்பணும், என்ன?” “சரிங்” “பசங்களோட யூனிட் டெஸ்ட் மார்க்கெல்லாம் அப்பப்ப இங்க வந்துட்டே இருக்கணும், என்ன?” “சரிங்” “மூனு யூனிட் டெஸ்ட் மார்க்கையும் வெச்சுதான் இண்டர்னல் மார்க் போடணும், என்ன?” “சரிங்” “இன்னிக்கு செம மழை, அதனால நாளைக்கு லீவு விட்றணும், என்ன?” “..........” “என்ன?” “..........” “என்ன சத்தத்தையே காணோம்?” “சாரிங்” “என்னது? “சாரிங்” “மத்ததுக்கு எல்லாம் சரின்னு சொன்னீங்க?” “சாரிங்” “லீவு விடணும்னு கவர்மெண்ட் உத்தரவு போட்ருக்கே!” “சாரிங்” “என்னமோ பண்ணித் தொலைங்க!” “சரிங்” “அப்புறம் பாஸ் பர்சண்டேஜ் 75%ஆவது இருக்கணும், என்ன?” ”சரிங்” “இதுக்கேல்லாம் மட்டும் மண்டைய மண்டைய ஆட்டுங்க. நாளைக்கு லீவு விட சொன்னா மட்டும்...” “சாரிங்”