தமிழக அரசியல் வரலாறு: பாகம்-1
ஆர்.முத்துக்குமாரின் ‘தமிழக அரசியல் வரலாறு’ புத்தகத்தின் முதன் பாகத்தை வாசித்து முடித்தேன். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது முதல் இந்திரா காந்தி ஆட்சியில் ஒன்னே முக்கால் வருட அவசர நிலைப் பிரகடனம் முடிவுக்கு வரும் வரை உள்ள காலத்தில் தமிழக அரசியல் களம் எப்படி இருந்தது, என்ன சம்பவங்களெல்லாம் நடைபெற்றன, அவற்றின் பின்னணி என்ன என்று எளிய நடையில் படிக்க செம சுவாரசியமாக இருக்கிறது. வரலாறு வேறு, விவரங்கள் கொஞ்சம் வரண்டு போனாலும் வாசகனுக்கு அலுப்பு தட்டிவிடும். ஆனால் ஒரு வெகுஜன அரசியல் இதழில் தொடராக வெளி வந்ததாலோ என்னவோ, ஒரு கதை போல் பரபரவென்று புத்தகம் டாப் கியரில் பறக்கிறது. ஆங்கிலத்தில் ‘The Adventures of…’ என்று தொடங்கும் பல கதைகளைப்போல் இதை ‘The Adventures of Tamil Nadu’ என்று சொல்லலாம். தமிழகத்தின் சரித்திரப் பக்கங்களில் இவ்வளவு சாகசப் பயணங்களா என்று ஆச்சரியப்பட வைக்கும் நூல். இந்நூலை வாசித்து முடிக்கும்போது நூல் நெடுக ஒரு மெல்லிழ இழை அனைத்தையும் இணைப்பதை உணரலாம். அது, ”யாரையும் முழுமையாக ஏற்கவும் முடியாது, முழ...