நேரு நினைவு தினம்
மேற்கு ஐரோப்பிய சிந்தனைப் பரப்பில் இயங்கும் அறிவுஜீவிகளுக்கு நேருவின் மீது அதீத விமர்சனப் பார்வை இருப்பதைக் கடந்த மூன்று மாத உரையாடல்களில் என்னால் உணர முடிந்தது (சில அதிரடியான விதிவிலக்குகள் உண்டு; முடிந்தால் இன்னொரு பதிவில்). அரசு இயந்திரத்திற்குள் இயங்கும் ஒருவர் அவ்வியந்திரத்தின் வன்முறை ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகிறார். அந்த நிலையே அவரை காந்தியத்திலிருந்து விலக வைத்துவிடுகிறது என்று ஒரு சிலர் கருத்து கொண்டிருந்தார்கள். “நேருவுக்கு காந்தியைத் தாண்டிய தனித்த அடையாளம் உண்டு, ஆனால் அதே நேரத்தில் காந்திக்கு நெருக்கமாக அவரை வைக்காமல் வேறு யாரை வைக்க முடியும்?” என்று நான் வாதிட்டேன். ஒவ்வொரு முறையும் நேருவின் குடும்பம் என்று அவர்கள் சொல்லும்போதும் இடைமறித்து ‘இந்திராவின் குடும்பம்’ என்று திருத்தியதை அவர்கள் ஆச்சரியத்துடன் கவனத்தில் எடுத்துக்கொண்டார்கள். ஜெர்மனியை நாசிசத்திலிருந்து காப்பாற்றியவர் என்று சர்ச்சிலின் மீது அதீத மதிப்பு என்னுடைய சில ஐரோப்பிய நண்பர்களுக்கு உண்டு. ஆனால் காலனிய ஆதிக்கத்திற்கு உள்ளான ஒரு நாட்டிலிருந்து வந்த நான் சர்ச்சிலை ஒரு மோசமான தலைவராக சித்தரித்தப...