இது வெறும் ஆரம்பம்தான்
இன்று எனக்கு நன்றாகத் தூக்கம் வரும் என்று நினைக்கிறேன். 721 பேரின் வாழ்க்கையை மீட்டெடுத்ததில் அடியேனுக்கும் சிறு பங்கு இருக்கிறது என்று எண்ணும்போது எதையோ சாதித்த உணர்வு மேலிடுகிறது. தமிழக முதல்வரின் ஏழைகளுக்காக இலவச வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காகப் புணரமைக்கப்பட்ட கால்நடை மருத்துவனைகளில் பணி நியமனம் செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் 843 பேர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் 15 வருட சர்வீஸ் போட்டு மாதத்திற்கு ஒன்றரை லட்சம் வரை தனியார் நிறுவனங்களில் சம்பளம் வாங்கி வந்தவர்கள், ஆயினும் அரசு வேலையாயிற்றே என்று அதை உதறித் தள்ளிவிட்டு அரசு கால்நடை உதவி மருத்துவர்களாக சென்ற வருடம் பணி நியமனம் பெற்றனர். இந்நிலையில் ஏப்ரல் 28ம் தேதி இந்தப் பணியிடங்களுக்கு ஓப்பன் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வர, அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார்கள். ஒரே வருடத்தில் நடுத்தெருவுக்கு வந்துவிடும் அளவிற்கு அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியானது. இதை விடக்கூடாது என்று நானும் திலீபன்...