பிரஷருக்கு No... பிளஷருக்கு Yes - பாய்ச்சல் காட்டும் படகுப் பெண்!
மேகனா... இந்திய விளையாட்டின் மகுடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் மற்றுமோர் மரகதக்கல். பாய்மரப்படகு செலுத்தும் போட்டியில், காற்றின் துணைகொண்டு, அது வீசும் திசையை சாதகமாக்கி, லாகவமாகப் படகை செலுத்தி, பதக்கங்களை அள்ளும் இயற்கையின் செல்லப் பிள்ளை. பெண்களுக்கான 'ரேடியல்’ பிரிவின் தரவரிசைப் பட்டியலில்... இந்தியாவிலேயே இரண்டாவது இடம் இப்போது இவரிடம்! ''2010-ல் இந்திய அளவில் நடந்த 'ஓஷன் ப்ளூ டிராபி' (Ocean Blue Trophy)... பெண்களுக்கான 16 வயதுக்கு உட்பட்ட 'லேசர் 4.7 (பாய்மரத்தின் பரப்பளவைக் குறிப்பதுதான் 4.7 என்பது) பிரிவில் வெள்ளி வாங்கினேன். இந்த வருஷம் அதே பிரிவுல தங்கம் வாங்கியிருக்கேன்!'' என்று சந்தோஷப் புன்னகை பூக்கும் மேகனாவின் பதக்கப் பட்டியல், 'லேசர் ரேடியல்’ பிரிவில் வெள்ளி, '420' (படகின் நீளத்தை செ.மீட்டரில் குறிப்பது) பிரிவில் வெள்ளி... என நீள்கிறது. இத்தனை சாதனைகளையும் மேகனா நிகழ்த்திக் கொண்டிருப்பது ப்ளஸ் டூ படித்துக் கொண்டே! ''ஒன்பதாவது படிக்கும்போது 'தமிழ்நாடு செயிலிங் அசோஸியேஷன்'ல சம்மர் கேம்ப்...