சாரல் கூத்துப் பட்டறை
SSN கல்லூரியில் சேர்ந்த பிற்பாடான இந்த மூன்று வருடங்களில் நான் சாரல் தமிழ் மன்றத்திற்குச் செய்த முதல் உருப்படியான வேலை கல்லூரித் தமிழன்பர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து நனவாக்கிய நாடக அரங்கேற்றத்தை ஒருங்கிணைத்ததுதான். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் என் சீனியர்கள் கனவு கண்டு மேற்கொண்ட பெருந்தவம் இது. சீனியர்கள் நடிகர்களைத் தேர்வு செய்தபின் நாடகத்திற்கான அதிகாரப்பூர்வ செயல்முறைகளை வகுத்து, அவற்றைப் படிப்படியாக செயல்படுத்தி, பலரின் தூக்கமில்லாத இரவுகளின் துணையோடு நாடகத்திற்குக் கதை வசனம் எழுதி, இயக்கி, நொடிக்கு நொடி அநியாயத்திற்கு விளம்பரங்கள் செய்து, அறிவியல் பூர்வமாக ஆடியோ டீசர் எல்லாம் வெளியிட்டு என் நண்பர்களின் ஃபேஸ்புக் பக்கங்களைத் திணறடித்து, இறுதியாக சாரல் தமிழ் மன்றத்தின் நாடக உட்பிரிவான ‘சாரல் கூத்துப் பட்டறை’யை ’டமால் டுமீல் டமில்’ மற்றும் ‘கலாட்டா சம்பந்தம்’ ஆகிய இரு நாடங்கங்களின் அரங்கேற்றம் மூலம் பலத்த ஆரவாரத்தின் நடுவே விதைத்தபோது, இதை இதோடு விடக்கூடாது என்ற எண்ணமே மிஞ்சியது. இந்த ஒரு மாத ஓய்வற்ற பகல்களும் ...