கோப்பெருந்தேவியும் கோப்பைத் தேனீரும்
”இதற்கு முன்னால் நீ உன் வாழ்க்கையில் அனுபவித்திராத இன்பத்தை உனக்கு நான் தர இருக்கிறேன்” வீடணன் தாலியைக் கட்டியதும் கோப்பெருந்தேவியின் காதில் கிசுகிசுத்த முதல் வாக்கியம் இதுதான். திருமணம் முடிந்தவுடன் வயது பார்க்காமல் ஆண்கள் மாப்பிள்ளையையும் பெண்கள் மணப்பெண்ணையும் ஒரு புதிரான குறும்புடன் பார்ப்பார்களே? “மச்சி, ம்ம்ம், ம்ம்ம்!”, இது வேறு யார்? நண்பனாகத்தான் இருக்கும். ”ஆஸ்திரேலியா போனால் கங்காரு குட்டி. சீனா போனால் பாண்டா கரடி குட்டி. எங்கே போனாலும் சரி, வரும்போது எனக்கு ஒரு குட்டியை எடுத்து வரவேண்டும், ஆமாம்.”, இது பக்கத்து வீட்டு முற்போக்கு அங்கிள். வீடணன் யோசித்தான். விலங்குகள் அதிகம் இல்லாத குளுகுளு நாட்டிற்கு செல்ல வேண்டும். எங்கு செல்லலாம்? பெயரிலேயே ஐஸ் இருக்கிறது. ஐஸ்லாந்து போகலாம் என்று முடிவெடுத்தார்கள். ஐஸ்லாந்தில் ஐந்து நாட்கள். கேட்க வேண்டுமா? அரசியல்வாதியைப் போல் அல்லாமல் தன் வாக்குறுதியை கணத்திற்குக் கணம் நிறைவேற்றினான் வீடணன். இருவரும் தினம் தினம் அருகருகே அயர்(லா)ந்து போனார்கள். விளைவு. ஐந்தே ஆண்டுகளில் நான்கு குழந்தைகளுக்கு உறவானார்கள். இங்கிலன் , வேலன்...