கிராம சபைகள் - ஒரு பார்வை
இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் 80 சதவீத மக்கள் கிராமப்புறத்தில் இருந்தனர். தற்பொழுது 70 சதவீதம் இருக்கின்றனர். திட்டக்குழுவின் படி 47.4 சதவீத பழங்குடியினரும் 42.3 சதவீத ஒடுக்கப்பட்டோரும் வறுமையில் உள்ளனர். மக்கள்தொகை ஏற ஏற கிராம இந்தியாவின் பிரதான வாழ்வாதாரமான விவசாயத்தின் மீதான அழுத்தமும் அதிகரித்தபடி உள்ளது. 2001 கணக்கெடுப்புப்படி கிராமபுறப் பெண்களில் 46.6 சதவீதம் பேர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், சில மாநிலங்களில் மூன்றரை வருடங்களுக்கும் குறைவாகவே பள்ளிக்கூடம் செல்பவர்கள். மகப்பேறு இறப்பு விகிதம் பற்றி சொல்லவே தேவையில்லை. 2004-06 வருடங்களில் உத்தரப் பிரதேசத்தில் 1000 பிறப்பிற்கு 440 தாய்மார்கள் இறந்த சோகம் உண்டு. கிராமப்புறங்களில் மக்கள் தினம்தோறும் சந்திக்கும் சிக்கல்கள் முக்கியமாக இரண்டு. ஒன்று, பொருளாதார ஏற்றத்தாழ்வு. நில உரிமைக்காரர்களுக்கும் கூலி விவசாயிகளுக்கும் இடையே உள்ள பொருளாதார இடைவெளி பல மாநிலங்களில் அகலம். விளைவு, அடிக்கடி இவர்களது வேற்றுமைகள் மோதல்களில் முடிவதுண்டு. இரண்டு, சமூக வாழ்வு இன்றும் சாதியமைப்பினால் சில குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் சமூக பொருளாதார ந...