சம்பாரணும் காந்தியும்
26/10/16 அன்று தி.நகர் காந்தி கல்வி நிலையத்தில் ஜாக் புஷ்பதாஸ் எழுதிய “Champaran and Gandhi: Planters, Peasants and Gandhian Politics" புத்தகத்தின் நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. திரு. அண்ணாமலை அவர்கள் மிக அருமையாக செலுத்திச் சென்ற அந்நிகழ்வில் நான் கேட்ட ஒரு விஷயத்தை என் நினைவில் உள்ளவரை, என் நடையில் தருகிறேன். “காந்தி வழிநடத்திய இந்திய தேசிய காங்கிரஸினால் எல்லாம் சுதந்திரம் வந்துவிடவில்லை. இரண்டாம் உலகப்போரினால் பிரிட்டனுக்கு பொருட்சுமை ஏறியது, அது தாங்காமல் ‘போராடுகிறார்கள், கொடுக்கிறோம்’ என்கிற சாக்கை வைத்து நாசூக்காக வெளியேறிவிட்டார்கள், அவ்வளவுதான்”, என்று சிலர் சொல்கிறார்கள். ஒரு அரை நூற்றாண்டு வரலாறைத் தன்னுள்ளே தேக்கி வைத்திருக்கும் ஒரு மாபெரும் இயக்கம் சந்தித்த ரணங்களையும் செய்த சாதனைகளைகளையும் இப்படி ஒரே வாக்கியத்தில் எளிதாகக் கடந்து போய் விடுகிறார்கள். பல கல்லூரிகளுக்கும், குறிப்பாக வட மாநிலங்களில் அண்ணாமலை அவர்கள் உரையாற்றச் செல்லும்போது அங்குள்ள மாணவ ...