சத்யவரதன் குராயூர்
முகநூலில் சத்யவரதன் என்றொரு நண்பர் கிடைத்தார். நன்றாக நினைவிருக்கிறது, சுமார் எட்டு ஒன்பது மாதங்களுக்கு முன் இருக்கும். அப்பொழுது “மார்க்சியம் இந்தியாவின் சாதியமைப்பைக் குறைவாக எடைபோட்டுவிட்டது” என்று நான் போட்ட ஒரு பதிவிற்கு லைக் போட்டு நட்புக் கோரிக்கை விடுத்தார். நான் கோரிக்கையை ஏற்ற அடுத்த நிமிடம் என் தனிப்பெட்டியில் வந்தார். “sariyaaka sonneerkal" “நன்றி சகோ”, என்றேன் ஆங்கில வரிவடிவத்தில் இருந்த அவரின் வழக்குத் தமிழை என் தமிழ்த் தமிழோடு மாற்றி மாற்றி இங்கு கொடுப்பது மனிதத்தன்மையற்ற செயலாதலால், “ஏன் சார்?”, என்று ஏராளமாய் இளித்தேன். “நீயும் அந்த குரூப்புதானா?”, என்றார். எந்த குரூப்பைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. நன்றாக எழுதுகிறேன் என்று சர்ட்டிபிகேட் எல்லாம் கொடுத்தாரே, என்று எண்ணினேன். அதை அவரிடமும் கேட்டுவிட்டேன். “ஏன் சார் நல்லா எழுதறேன்னுலாம் சொன்னீங்களே? படிக்கலியா?” “உங்களையெல்லாம் ஒழிச்சுக்கட்டதான்டா மோடி ஆட்சிக்கு வந்திருக்கார்”, என்று ஒரே போடாகப் போட்டார். “சார் உங்க கருத்தை மதிக்கிறேன் சார், மோடியையெல்லாம் இழுக்காதீங்க” “ஏன் இழுத்தா...