கர்னல் ராபர்ட் கில்லிப்ரூவின் அறிவுரை
கர்னல் ராபர்ட் கில்லிப்ரூ (ஓய்வு, அமெரிக்க ராணுவம்) எழுத்தாளர் ----------------------------------------------------------------------------------- பல ஆண்டுகளுக்கு முன் நான் ராணுவப் பணிக்குள் நுழைவதற்கு முன்பாக, கடற்படையில் பணிபுரிந்த ஒரு ஓய்வுபெற்ற கர்னலை சந்தித்தேன். இரண்டாம் உலகப்போரில் தராவாவில் சண்டையிட்டவர். மிகவும் புத்திகூர்மையுள்ள மனிதர். அவர் எனக்கு ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கினார். அவர் எனக்கு சொன்னதை இப்பொழுது நான் உங்களுக்கு சொல்கிறேன்: ராணுவ வீரனாகவே நீங்கள் பணிபுரிய விரும்புகிறீர்களா? நல்லது. உங்கள் தாய்நாட்டை நீங்கள் காக்கப்போகிறீர்கள். அதற்காக முதலில் மிக்க நன்றி. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு காலம் ராணுவ சீருடையில் இருக்கப்போகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு குறைவாக நீங்கள் உங்கள் தாய்நாட்டைப் புரிந்துகொள்வீர்கள். ஏனென்றால் ஜனநாயகம் என்பது ராணுவ வாழ்க்கைக்கு நேர் எதிரானது. அது குழப்பமானது; நேர்மையற்றது; ஒழுங்கற்றது; அதே நேரத்தில் அது மகத்தானதும் மகிழ்ச்சியானதும் சுதந்திரமானதும் கூட. நாம் அவ்வாறு அல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் ...