கர்னல் ராபர்ட் கில்லிப்ரூவின் அறிவுரை
கர்னல் ராபர்ட் கில்லிப்ரூ (ஓய்வு, அமெரிக்க ராணுவம்)
எழுத்தாளர்
-----------------------------------------------------------------------------------
பல ஆண்டுகளுக்கு முன் நான் ராணுவப் பணிக்குள் நுழைவதற்கு முன்பாக, கடற்படையில் பணிபுரிந்த ஒரு ஓய்வுபெற்ற கர்னலை சந்தித்தேன். இரண்டாம் உலகப்போரில் தராவாவில் சண்டையிட்டவர். மிகவும் புத்திகூர்மையுள்ள மனிதர். அவர் எனக்கு ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கினார். அவர் எனக்கு சொன்னதை இப்பொழுது நான் உங்களுக்கு சொல்கிறேன்:
ராணுவ வீரனாகவே நீங்கள் பணிபுரிய விரும்புகிறீர்களா? நல்லது. உங்கள் தாய்நாட்டை நீங்கள் காக்கப்போகிறீர்கள். அதற்காக முதலில் மிக்க நன்றி. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு காலம் ராணுவ சீருடையில் இருக்கப்போகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு குறைவாக நீங்கள் உங்கள் தாய்நாட்டைப் புரிந்துகொள்வீர்கள். ஏனென்றால் ஜனநாயகம் என்பது ராணுவ வாழ்க்கைக்கு நேர் எதிரானது. அது குழப்பமானது; நேர்மையற்றது; ஒழுங்கற்றது; அதே நேரத்தில் அது மகத்தானதும் மகிழ்ச்சியானதும் சுதந்திரமானதும் கூட. நாம் அவ்வாறு அல்ல.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராணுவத்திலிருந்து வெளியேறாமல் அதிலேயே நீங்கள் தங்கிவிட்டால், உங்கள் சிந்தனைப்போக்கில் ஒரு மாற்றம் ஏற்படும். நீங்கள்தான் இந்நாட்டில் போற்றுதலுக்குரிய வாழ்க்கையை வாழ்வதுபோன்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படும். “ஹே குடிமக்களே! உங்களை விட நாங்கள் மேலான வாழ்க்கையை வாழ்கிறோம். நாங்கள் கட்டுப்பாடும் ஒழுங்கும் மிக்கவர்கள். நாங்கள் தேசப்பற்றாளர்கள். தியாகம் என்றால் என்னவென்று எங்களுக்குத்தான் தெரியும்”, என்று வாய்விட்டு சொல்லத் தோன்றும். என் அருமை வீரனே, நான் சொல்கிறேன், அந்த கற்பிதம் மிக மிகத் தவறானது. நீங்கள் ராணுவ வீரனாக நிலைபெற்றால், ஜனநாயகத்தை பாதுகாக்கும் பணியை நீங்கள் செய்யலாம். ஆனால் அந்த ஜனநாயகத்தைப் புரிந்து கொள்ளவோ, அதன் அங்கமாக ஆகவோ உங்களால் முடியாது. அதை விடக் கொடுமை, எந்த சமூகத்திலிருந்து நீங்கள் வந்தீர்களோ, அந்த சமூகமே உங்களுக்கு அந்நியமாகத் தெரிய ஆரம்பிக்கும். அதன் பண்பாட்டு வளர்ச்சியில் பங்குபெறாமல் ஒரு அந்நியராக எல்லா நேரத்திலும் அதிலிருந்து நீங்கள் விலகியே இருப்பீர்கள். இந்த தியாகத்தைத்தான் நீங்கள் செய்யப்போகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
- கர்னல் ராபர்ட் கில்லிப்ரூ
(தமிழில்: வ.விஷ்ணு)

Comments
Post a Comment