வெல்கம் 2018!
நாளை புத்தாண்டு. இன்னிக்காவது ஏதாவது வித்தியாசமா பண்ணு, 2017ல ஏதாவது பண்ண மாதிரி இருக்கும், என்றார்கள். அதனால் 2017-ல் இன்று மட்டும் புதுசா இப்படி. ஸ்னிப்பெட்ஸ். -------------------------------------------------------------------- கடவுள் கொஞ்சம் தேவைப்படுகிறார். 2018-ல் அவரை ஏற்றுக்கொண்டு பார்க்கலாம் என்றிருக்கிறேன். நீ எல்லாம் தைரியசாலி, மனோதிடம் மிக்கவன். லைஃப் ஆப் பையின் மூலம் யன் மார்ட்டெல் என்ன சொல்ல வந்தார், என்றெல்லாம் என்னை நானே ஏமாற்றிக்கொள்ளாமல், ஈகோவை சொறிந்துகொள்ளாமல், என்ன ரிசல்ட் வருகிறது என்று பார்க்க விருப்பம். ஆக இந்த வருடம் நான் போராடப்போவது எனக்குள் இருக்கும் நிஹிலிஸ்டோடு என்பது எனக்குப் புரிந்துவிட்டது. அவரவர் நம்பும் கடவுள் அவரவருக்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் தரட்டுமாக. -------------------------------------------------------------------- சென்னையில் எந்த ஏரியாவில் எந்த கடையில் பானிபூரி நன்றாக இருக்கும் என்று ஒரு டேட்டாபேஸ் நாக்கில் பதிந்துவிட்டது. சார்ந்தோர் அனைவருக்கும் வாழ்த்துகள். --------------------------------------------------------------------...