Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

100% Discount on Vishnu's new book

Vishnu's new book is on sale! 100% discount for four days [Free until 22nd oct, 2018 morning]. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். இந்த வார விடுமுறையை ஒட்டி [வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் காலை] நான்கு நாட்கள் என் புத்தகத்தின் மின்பதிப்பு அமேசானில் இலவசமாகக் கிடைக்கும்.

வெல்கம் 2018!

நாளை புத்தாண்டு. இன்னிக்காவது ஏதாவது வித்தியாசமா பண்ணு, 2017ல ஏதாவது பண்ண மாதிரி இருக்கும், என்றார்கள். அதனால் 2017-ல் இன்று மட்டும் புதுசா இப்படி. ஸ்னிப்பெட்ஸ்.

--------------------------------------------------------------------

கடவுள் கொஞ்சம் தேவைப்படுகிறார். 2018-ல் அவரை ஏற்றுக்கொண்டு பார்க்கலாம் என்றிருக்கிறேன். நீ எல்லாம் தைரியசாலி, மனோதிடம் மிக்கவன். லைஃப் ஆப் பையின் மூலம் யன் மார்ட்டெல் என்ன சொல்ல வந்தார், என்றெல்லாம் என்னை நானே ஏமாற்றிக்கொள்ளாமல், ஈகோவை சொறிந்துகொள்ளாமல், என்ன ரிசல்ட் வருகிறது என்று பார்க்க விருப்பம். ஆக இந்த வருடம் நான் போராடப்போவது எனக்குள் இருக்கும் நிஹிலிஸ்டோடு என்பது எனக்குப் புரிந்துவிட்டது. அவரவர் நம்பும் கடவுள் அவரவருக்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் தரட்டுமாக.

--------------------------------------------------------------------

சென்னையில் எந்த ஏரியாவில் எந்த கடையில் பானிபூரி நன்றாக இருக்கும் என்று ஒரு டேட்டாபேஸ் நாக்கில் பதிந்துவிட்டது. சார்ந்தோர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

--------------------------------------------------------------------

ரேண்டம் கான்வோ. எனக்கும் என் தம்பிக்கும் இன்று நடந்த உரையாடல்:

“ரஜினி அரசியலுக்கு வரப்போறேன்னு இன்னிக்கு சொல்லிட்டாருடா”

“ரைட்டு. என்ன ஐடியாலஜியாம்?”

“ஆன்மிக அரசியல்”

“பண்ணட்டும். கட்சிக்கு என்ன பேராம்?”

“இருடா இருடா. இன்னும் எதுவும் சொல்லல. படக் படக்னு கட்சி, கொடினுலாம் அவரு ஆரம்பிச்சிட்டா அப்போ போன தலைமுறை என்ன ஏமாளியா? நீங்களும் ஒரு இருபது வருசம் வெயிட் பண்ணுங்களேன்”

“இல்லடா, காலைலேந்து பாக்குறேன். ஓவரா குதிக்கிறீங்க எல்லாரும், அதான்”

“அரசியலுக்கு வரவான்னு ரஜினி டீசர் விட்டப்போ எனக்கு ரெண்டு வயசுடா. இப்போதான் வர்றாரு. அதான் கொண்டாட்டம்”

“வரட்டும் வரட்டும்”

“சுதந்திரம் வராதான்னு ஏங்கி செத்தவங்க போன செஞ்சுரில உண்டு. அதுபோல ரஜினி அரசியலுக்கு வர்றதைப் பாக்காமலேயே பல பேரு செத்திருக்காங்க. திஸ் இஸ் ஹிஸ்டாரிக் டூட்!”

“டேய் டேய் ஓவர்டா இதெல்லாம்”

“இல்லடா, இந்த டைம் பீரியட் இருக்குல்ல? முதலாம் உலகப் போர் முடிஞ்ச சமயத்துல அரசியலுக்கு வரவான்னு கேட்டு, ஒருவழியா அரசியலுக்கு வந்தப்போ இரண்டாம் உலகப்போரே ஸ்டார்ட் ஆகிடுச்சாம். அந்த அளவுக்கு டைம் கேப். இதெல்லாம் 90-ஸ் கிட்ஸ்குதான் புரியும். இருபது வருசம் கழிச்சு சிவகார்த்திகேயன் சிஎம் ஆவாரு, அப்போ புரியும் உனக்கு இந்த எமோஷன்ஸ் எல்லாம்”

“மூடு. லெந்த்தா போயிட்டு இருக்கு”

“ரஜினி வர்ற கேப்புல அமெரிக்கா நாலு பிரசிடெண்ட்டைப் பாத்துருச்சு”

“போதும்டா, மூடு. சீனு”

--------------------------------------------------------------------------

2018-ல் (அல்லது 2018-லாவது) வாங்க வேண்டியவை என்று லிஸ்ட் போட்டால்... Wacom digital pen வருகிறது. பிறகு Red Dead Redemption 2 PC கேம். Baby Driver திரைப்படத்தை Blu-ray சிடி வாங்கிதான் பார்ப்பேன் என்று எர்கார் ரைட்டின் ட்விட்டர் பக்கத்தின் முன்பாக சத்தியம் செய்திருக்கிறேன். அதை வாங்க வேண்டும். Arunkumar Rahmaniac-கை நார்சிசவாதி என்று சொல்லிவிட்டேன், அதற்கு பரிகாரமாய்தான் இந்த ஸ்னிப்பெட். Thamil Thedal நார்சிசவாதியாக இருப்பதில் பெருமை கொண்டவன். எனவே இன்னும் இரண்டு நாட்களுக்கு அவன் பேஸ்புக் பக்கம் யாரும் போய்விட வேண்டாம்.

-------------------------------------------------------------------------

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். புத்தாண்டுப் பரிசாக யாராவது எனக்கு “Political Violence in Ancient India - Upinder Singh” என்னும் புத்தகத்தைப் பரிசாக அளித்தால், அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி