நூலிலிருந்து சீரிஸ் - 4: இலையுதிர்கால இல்லுமினாட்டிகள்
//கேள்வி: அதெப்படி கமலுடைய கட்சி சின்னத்தைப் பார்த்தே அவர் ஒரு இல்லுமினாட்டி என்று முடிவு கட்டுகிறீர்கள்? - க.பாஸ்கரன்
பதில்: அன்புள்ள பாஸ்கரன். உங்கள் கேள்விக்கான பதிலை இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒன்று, அதெப்படி கமலை இல்லுமினாட்டி என்று சொல்கிறோம்? அந்த சின்னத்தில் ஆறு கைகள் பாஸ்கரன். அதாவது ஆறு குடும்பங்கள். அதற்கு நடுவில் ஆறு முனைகள் கொண்ட நட்சத்திரம் பாஸ்கரன், அதாவது இன்னொரு ஆறு குடும்பங்கள். ஆறையும் ஆறையும் கூட்டிப்பாருங்கள், பதினான்கு வருகிறதா? இப்பொழுது அந்த நட்சத்திரத்திற்கும் கைகளுக்கும் இடையே இருக்கும் வெற்றிடத்தை ஒன்று என்று எடுத்துக்கொண்டு அதை பதினான்கோடு கழியுங்கள். பதிமூன்று! பதிமூன்று குடும்பங்...
வெயிட். கணக்கு தப்பாக வருகிறது. மன்னிக்கவும் ஆறும் ஆறும் பன்னிரண்டா? ம்ம்ம், அப்படியென்றால் அந்த வெற்றிடத்தைக் கழிப்பதற்கு பதிலாக கூட்டிவிடுங்கள் பாஸ்கரன். 6+6+1. பதிமூன்று! பதிமூன்று குடும்பங்கள்! இல்லுமினாட்டி!
இரண்டாவதாக, ‘அதெப்படி சின்னத்தைப் பார்த்தே இல்லுமினாட்டி என்று சொல்கிறீர்கள்’ என்று அறிவுக்கெட்டத்தனமாகக் கேட்டிருக்கிறீர்கள். எங்களின் சிந்தனைப்போக்கு உங்களின்பால் நீட்சியடையவில்லையே என வருத்தமாக இருக்கிறது பாஸ்கரன். என்னமோ இதற்கு முன்னால் நாங்கள் அறிவியல் ஆராய்ச்சி எல்லாம் செய்து இல்லுமினாட்டிகளை அடையாளம் கண்டது மாதிரியும், கமல் விஷயத்தில் மட்டும் சின்னத்தைப் பார்த்தே முடிவு செய்துவிட்ட மாதிரியும் அல்லவா இருக்கிறது உங்கள் கேள்வி? காலங்காலமாக நாங்கள் சின்னத்தைப் பார்த்துதானேயா சொல்லிக்கொண்டு திரிகிறோம்? ஏதோ மற்றவர்களை ஆறு மாத காலம் தவங்கிடந்து கண்டுபிடித்த மாதிரியும், கமலுக்கு மட்டும் நாங்கள் ஓரவஞ்சனையாக நடந்துகொண்டுவிட்ட மாதிரியும் மனசாட்சியின்றி கேட்கிறீர்களே பாஸ்கரன்? இப்படியெல்லாம் நீங்கள் கேட்க மாட்டீர்களே... ம்ம்ம்... வெயிட்...
ஓ மை காட்! டேய் இல்லுமினாட்டி! உன்ன கண்டுபிடிச்சிட்டேன்டா டேய்! உன் கேள்வியில மொத்தம் பதினொரு வார்த்தைங்க. அதோட ரெண்டைக் கூட்டினா? ஹஹா, கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனச்சியாடா இல்லுமினாட்டி பாஸ்கரா!//
- “இலையுதிர்கால இல்லுமினாட்டிகள்: ஒரு விலங்கியல் ஆய்வு” நூலிலிருந்து
#நூலிலிருந்து_சீரிஸ்

Comments
Post a Comment