ஜெர்மன் அதிபரின் யத் வாஷெம் உரை - ஜனவரி 23, 2020
பிராங்க்-வால்டர் ஷ்டைன்மையர், குடியரசுத் தலைவர், ஜெர்மனி நாள்: ஜனவரி 23, 2020 இடம்: யத் வாஷெம், யெருசலேம்/இஸ்ரேல் “என்னை இங்கு வரவைத்த ஆண்டவனின் முன்பு என்னுடைய பிரார்த்தனைகளை சமர்ப்பித்துக்கொள்கிறேன்." இன்று யத் வாஷெம்மில் உங்களிடையே உரையாற்றும் வாய்ப்பு அமைந்தது எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன். யூத இன அழிப்பில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஒரு அணையாச் சுடர் இங்கே யத் வாஷெம்மில் எரிந்துகொண்டிருக்கிறது. இந்த இடம் அவர்கள் அனுபவித்த சித்திரவதையை நினைவூட்டுகிறது. லட்சக்கணக்கான மக்கள் அனுபவித்த சித்திரவதையை. இந்த இடம் அவர்களின் வாழ்க்கையை நினைவூட்டுகிறது - ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்க்கையையும். இந்த இடம் சாமுவெல் டைடெல்மானை நினைவுகூர்கிறது. டைடெல்மான் மக்காபி வார்சா அணிக்காகப் பதக்கங்களை வென்ற நீச்சல் வீரர். அவருடைய சகோதரி ரேகா, சப்பாத் அன்று அவருடைய அம்மாவுக்கு சமையலில் ஒத்தாசை செய்வாள். அவளை இந்த இடம் நினைவுகூர்கிறது. இந்த இடம் இடா கோல்ட்பிஷ்ஷை நினைவுகூர்கிறது, அவருடைய மூன்று வயது சிறுவன் விலியை நினைவுகூர்கிறது. அக்டோபரில் அவர்கள் சிசினாவோ கெட்டோவுக்கு அனுப்பப்பட்...