கடிதம் - யுட்டா ப்யோனிஷ்
அன்புள்ள விஷ்ணு, ஹராரியின் கட்டுரையை அனுப்பியமைக்கு நன்றி. ஆங்கிலம் தெரிந்த என் நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறேன். உனக்கே தெரிந்திருக்கும். சில அத்தியாவசியக் கடைகளைத் தவிர, மருந்தக மருத்துவமனைகளைத் தவிர பெர்லினில் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. முற்றிலும் புதியதோர் வாழ்க்கை முறைக்கு எங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறோம். குடும்பத்தினரோடு, நண்பர்களோடு, அண்டை வீட்டாரோடு நெருங்கிப் பழக முடியவில்லை. நல்லவேளையாக இதுவரை எனக்கு சிரமம் எதுவும் ஏற்படவில்லை. தள்ளாத முதுமையின் காரணமாக எச்சரிக்கையுடன் இருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கை நிலை எனக்குப் பல சாத்தியங்களை ஏற்படுத்தித் தந்துள்ளது. வீடு இருக்கிறது, தோட்டம் இருக்கிறது, நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வாசிக்கப்பட இருக்கின்றன. இப்போதைக்குப் பிரகாசிக்கும் சூரியன், இப்போதைக்கு நீல வானம், இப்போதைக்குக் குயில் சத்தம். ஆனால் என்னைப் போல் எல்லோருக்கும் இது அமையவில்லையே? உலகின் பல நகரங்களில் சிறுசிறு அறைகளில் நெருக்கியடித்துக்கொண்டு வாழும் மனிதர்களை நினைத்துப்பார்க்கிறேன். வெளியே விளையாட வேண்டும் என்று ஆசைப்படும் குழந்தைகள்...