ஆணுறுப்பில் விழுந்த பல்லி
தூங்கச் செல்வதற்கு முன் ஒன்றுக்குப் போகையில் பல்லி ஒன்று என் உறுப்பில் விழுந்துவிட்டது. இதயம் ஒரு வினாடி நின்றே போய்விட்டது. பதறியடித்தபடி உதறினேன். இரவு முழுவதும் தூக்கமே இல்லை. அடுத்த நாள் காலை டாக்டரிடம் சென்றேன். “பல்லி உங்களைத் தீண்டியதா?” என்று கேட்டார். “அப்படியே விழுந்துவிட்டது” என்றேன். “அதன் நாக்கு பட்டதா?” என்றார். “அதெல்லாம் தெரியவில்லையே, உதறினேன் ஓடிவிட்டது”. “விழுந்த இடத்தில் இதைத் தடவவும்” என்று ஒன்றை எழுதிக்கொடுத்தார். ஜோசியக்காரரிடம் போகவே பயமாக இருந்தது. தம்பியிடம் சொன்னேன். “சும்மா உளறாதே, இதெல்லாம் நடக்க சாத்தியக்கூறு மிகவும் குறைவு” என்றான். “அதுதான் நடந்துவிட்டதே!” என்று முறையிட்டேன். “என் அண்ணனுக்கு என்னவெல்லாம் நடக்கலாம் என்று என் அறிவு ஏற்கனவே சிலவற்றைக் கற்பனை செய்து வைத்திருக்கிறது, ஒருவேளை நடந்துவிட்டால் தாங்கிக்கொள்வதற்காக. சாலை விபத்து, புற்றுநோய், தற்கொலை, மாரடைப்பு, மரம் சாய்வது, ஆனால் பல்லி இப்படி விழுவதெல்லாம் சாத்தியம் மிகமிகக் குறைவு. என்னால் இந்த உண்மையை ஜீரணிக்க முடியவில்லை, எனவே ஏற்க மாட்டேன்” என்று கதவை அடைத்துக்கொண்டுவிட்டான். இணையத்தில் தேடின...