W.E.B. டுபாய்சின் எழுத்துகள் தற்பொழுது மின்வடிவில்
கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அமெரிக்க எழுத்தாளரும் சிந்தனையாளரும் பத்திரிகையாளருமான W.E.B. டுபாய்சின் பேச்சுகளும் எழுத்துகளும் தற்பொழுது மின் வடிவத்தில் கிடைக்கின்றன. Collected Works of Gandhi-யை இணையத்தில் பதிவேற்றியதைப் போன்ற பெரும் பணி இது. காந்தியும் டுபாய்சும் ஒருவருக்கொருவர் சில கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். காந்தி குறித்து டுபாய்ஸ் எழுதிய, ஆனால் பிரசுரமாகாமல் போன எழுத்துகளும் இம்மின்வடிவில் அடக்கம். அம்பேத்கர் ஜூலை 1946-ல் டுபாய்சுக்கு எழுதிய கடிதமும் நம் பார்வைக்குக் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்களின் நிலைக்கும் இந்தியாவில் தீண்டத்தகாதார் என்று கருதப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்றும், கறுப்பின மக்கள் ஐ.நா. சபைக்கு அனுப்பிய மனுவின் இரண்டொரு பிரதியைத் தனக்கு அனுப்பி வைக்க முடியுமா, அதே போன்றதொரு மனுவை இந்தியாவின் தீண்டத்தகாதோரும் அனுப்ப உத்தேசித்திருக்கிறோம் என்றும் எழுதியிருக்கிறார். முழு கடிதத்தின் சுட்டி கீழே. அதே மாதத்தில் டுபாய்ஸ் அம்பேத்கருக்கு பதில் கடிதம் எழுதி, தாழ்த்தப்பட்ட மக்களின...