''எப்படியோ மாட்டிக்கிட்டேன்!''
''மனைவியிடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?'' என்று இவர்களிடம் கேட்டபோது... ஆல்பின் மெக்ஃபர்லேன் , தொழிலதிபர்: ''ஒரு நாள் வேலை சீக்கிரம் முடிஞ்சு, ஃப்ரெண்டு ஒருத்தன் கூப்பிட்டானு பார்ட்டிக்குப் போயிட்டு லேட் நைட் வீட்டுக்குப் போனேன். வீட்ல கேட்டதுக்கு 'வேலை ரொம்பா ஜாஸ்தி’னு சொல்லிட்டுப் படுத்துட்டேன். மறுநாள் என் வீட்டுக்கு வந்த ஃப்ரெண்டு, '' நேத்து நைட் பார்ட்டி எப்படி மச்சி?''னு கேட்டுத் தொலைச்சிட்டான். அதை என் பொண்டாட்டியும் கேட்க... அவங்க பார்த்த பார்வை இருக்கே... என்னா திட்டு?'' சிங்காரவடிவேலு, ஆசிரியர்: ''என் மனைவிக்கு ஸ்ரீவைகுண்டம் கோயில் ரொம்பப் பிடிக்கும். முடிஞ்சவரைக்கும் அந்த ஊர்லேயே செட்டிலாகணும்னு ஆசைப்பட்டா. எனக்கும் அந்த ஊர்லேயே வேலை கிடைச்சுது. ஆனா, எனக்கு அங்கே இருக்க விருப்பம் இல்லை. அதனால, எனக்கு அங்கே வேலை கிடைச்ச விஷயத்தை மறைச்சு, சென்னைக்கு வந்துட்டோம். பத்து வருஷத்துக்கப்புறம் இந்த விஷயம் அவளுக்குத் தெரிஞ்சு, கிட்டதட்ட ஆறு மாசம் என்கிட்டப் பேசவே இல்லை. இப்போ பேசினாலும் ...