Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

''எப்படியோ மாட்டிக்கிட்டேன்!''

''மனைவியிடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?'' என்று இவர்களிடம் கேட்டபோது...

ஆல்பின் மெக்ஃபர்லேன், தொழிலதிபர்: ''ஒரு நாள் வேலை சீக்கிரம் முடிஞ்சு, ஃப்ரெண்டு ஒருத்தன் கூப்பிட்டானு பார்ட்டிக்குப் போயிட்டு லேட் நைட் வீட்டுக்குப் போனேன். வீட்ல கேட்டதுக்கு 'வேலை ரொம்பா ஜாஸ்தி’னு சொல்லிட்டுப் படுத்துட்டேன். மறுநாள் என் வீட்டுக்கு வந்த ஃப்ரெண்டு, '' நேத்து நைட் பார்ட்டி எப்படி மச்சி?''னு கேட்டுத் தொலைச்சிட்டான். அதை என் பொண்டாட்டியும் கேட்க... அவங்க பார்த்த பார்வை இருக்கே... என்னா திட்டு?''

சிங்காரவடிவேலு, ஆசிரியர்: ''என் மனைவிக்கு ஸ்ரீவைகுண்டம் கோயில் ரொம்பப் பிடிக்கும். முடிஞ்சவரைக்கும் அந்த ஊர்லேயே செட்டிலாகணும்னு ஆசைப்பட்டா. எனக்கும் அந்த ஊர்லேயே வேலை கிடைச்சுது. ஆனா, எனக்கு அங்கே இருக்க விருப்பம் இல்லை. அதனால, எனக்கு அங்கே வேலை கிடைச்ச விஷயத்தை மறைச்சு, சென்னைக்கு வந்துட்டோம். பத்து வருஷத்துக்கப்புறம் இந்த விஷயம் அவளுக்குத் தெரிஞ்சு, கிட்டதட்ட ஆறு மாசம் என்கிட்டப் பேசவே இல்லை. இப்போ பேசினாலும் ஒவ்வொரு தடவை சண்டை வரும் போதும் அந்த விஷயத்தைச் சொல்லிக்காட்டுவா!''

பா. விஜய், கவிஞர்: '''இளைஞன்’ படத்துல கதாநாயகனா நடிக்க ஒத்துக்கிட்டதுமே என் மனைவி போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா? 'பொண்ணுங்ககூட நெருக்கமா நடிக்கக்கூடாது’ னுதான். நானும் அப்படித்தான் நடிச்சேன். ஒரு சீன்ல கொஞ்சம் நெருக்கமா நடிக்க வேண்டிய சூழ்நிலை. கடைசியில பார்த்தா அந்தப் படம்தான் எல்லா போஸ்டர்லேயும் வந்துச்சு. என் மனைவிகிட்ட கிராஃபிக்ஸ்னு சொல்லிச் சமாளிச்சேன். ஆனாலும் அவ நம்பவே இல்லை. வேற வழி இல்லாம சரண்டர் ஆகிட்டேன்!''

மாரியப்பன், வாட்ச்மேன்: ''சின்ன வயசுல இருந்தே எனக்கு நாடகத்துல நடிக்கிறதுனா உசுரு. 20 வருஷத்துக்கு முன்னாடி மேல்மருவத்தூர்ல நடக்கிற லோக்கல் நாடகங்கள் முக்கால்வாசியில நான்தான் வில்லனா நடிப்பேன். கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் என் பொண்டாட்டி 'இனி நாடகத்துல நடிக்காதே.. ஏதாவது உருப்படியான வேலையா பாரு’னு சொல்லிட்டா. வேலை தேடப் போறேனு சொல்லிட்டு அவளுக்குத் தெரியாம அப்பப்போ நாடகத்துல நடிச்சுட்டு இருந்தேன். ஒருநாள் நான் நாடகத்துல நடிக்கிறதை பக்கத்து வீட்டுக்காரம்மா என் பொண்டாட்டிக்கிட்ட சொல்லிட்டாங்க. ரெண்டு நாள் வீட்டுல சோறே போடலை!''

குமார், வங்கி ஊழியர்: ''ஒரு நாள் என் ஃப்ரெண்டு பார்ட்டிக்குப் போயிட்டு அங்கே செமத்தியா சாப்பிட்டுட்டேன். என் ஒய்ஃப்க்குச் சொல்ல மறந்துட்டேன். வீட்டுல சமைச்சு வெச்சுட்டு  காத்துட்டு இருந்திருக்கா. வீட்டுக்குப் போனதும், சாப்பிடக் கூப்பிட்டப்ப 'எனக்கு வயித்து வலிம்மா.. சாப்பாடு வேணாம்’னு சொல்லிச் சமாளிச்சிட்டேன். அந்த நேரம் பார்த்து என் ஒய்ஃப்போட அண்ணன் போன் பண்ணி இருக்காரு. 'கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் மச்சானை ஹோட்டல்ல பார்த்தேன். அவரு ஃப்ரண்ட்ஸோட சாப்பிட்டுகிட்டு இருந்தாரு. ஏதாவது பார்ட்டியா?’னு கேட்க... போனை வெச்சுட்டு என் ஒய்ஃப் ருத்ர தாண்டவம் ஆடிட்டா!''
-வ.விஷ்ணு
படங்கள்: ப.சரவணகுமார் 

என் விகடன் - 19/10/12

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி