கெக்க பிக்க, கிக்கிலி பிக்கிலி
சீரியஸ் மோடு ஆன்: குழந்தைகளின் உலகம்தான் எத்தனை சுதந்திரமானது! கனவுகளும் கற்பனைகளும் எல்லையின்றி, விஞ்ஞானச் சுவர் இன்றி, காலமின்றி நேரமின்றி முடிவில்லாத அருவியாகப் பாய அதன் அடிவாரத்தில் பூத்துக் குலுங்கும் வெள்ளந்தி மலர்கள் நம்மை வரவேற்க, அதை முழுமையாய் அனுபவிப்பதற்காகவே நம் வாழ்க்கை இருந்திருக்கக்கூடாதா என்று சில சமயம் ஏங்க வைக்கும் வயது அது. குவித்து வைக்கப்பட்டிருக்கும் மணல் மீது ஏறி விளையாடி அதைக் கலைத்துப் போடும் அந்த ஜென் குருக்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இனி திரும்பவும் அந்தக் கவலையற்ற சிரிப்பின் ஊடே தெரியும் கற்பனை உலகத்தில் நம்மால் வாழ முடியாது என்கிற ஏக்கத்தில் என் நண்பன் ஒருவன் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. “சிறுவயதில் நாம் அனைவரும் பெரியவர்கள் ஆகவேண்டும் என்று நினைத்தோம். எதை வைத்துத்தான் அப்படி ஆகவேண்டும் என்று நினைத்தோமோ.“ ஜாலி மோடு ஆன்: அப்படி இப்படி என்று ’சின்னப் பசங்க’ என்ற வட்டத்திலிருந்து சமூகம் எங்களை வெளியே இழுத்துக்கொண்டாகிவிட்டது. ஒவ்வொருவரின் தலையிலும் ஒவ்வொரு பொறுப்பை ஒப்படைத்தாகிவிட்டது. ஏதாவது விளையாட்டுத்தனம் பண்ணி...