காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 4
முன்தொடர்ச்சி: காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 1 காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 2 காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 3 முன்குறிப்பு: லேண்ட்மார்க்கில் மனு பகவான்(21ம் நூற்றாண்டு மனிதர்) எழுதிய ‘The Peacemakers: India and the Quest for One World’ என்ற புத்தகத்தைக் கண்டவுடனே காணாததைக் கண்டது போல் ஐநூறு ரூபாய்க்கு அடித்துப் பிடித்து வாங்கினேன். ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பகத்தின் 237 பக்க வெளீயீடு. காந்தியைப் போல் நேருவும் இன்று எவ்வளவு தேவைப்படுகிறார் என்று அறிய இப்புத்தகம் அவசியம். இப்புத்தகம் சொல்லிய தகவல்களில் வெகு சில தகவல்களை மட்டும் இங்கே முடிந்தவரை தருகிறேன். (தொடர்கிறது) ஆண்டு 1944. அமெரிக்க பிரிட்டன் படைகள் ஃப்ரான்சிலிருந்து கிழக்கு முகமாக ஜெர்மனி நோக்கி முன்னேறத் துவங்கியிருந்த சமயம். ரஷ்யப் படைகள் மேற்கு முகமாக ஜெர்மானியர்களைத் துரத்தி பெர்லின் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் பிடி கொஞ்சம் கொஞ்சமா...