ஷெர்லாக்கின் கடிதம்
மனித உணர்வுகள் பற்றிய நமது தேடலில் நாம் அதிகம் மை சிந்திவிட்டோம். ஆனால் நம் கடிதப் போக்குவரத்து ஆரம்பித்தபோது நமக்கு அதைப்பற்றி என்ன புரிதல் இருந்ததோ, அதேதான் இப்பொழுதும் இருக்கிறது; நாம் இம்மியளவும் முன்நகரவில்லை. பல சமயங்களில் நான் ஒரு பெரும் பிளவின் விளிம்பில் நின்றபடி உரக்கக் கத்துகிறேன். அப்பொழுது மறுபக்கத்திலிருந்து வரும் பதில் உண்மையிலேயே உன்னுடையதுதானா, அல்லது அவை வெறும் என் வார்த்தைகளின் எதிரொலியா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது; அந்த சந்தேகத்தில் வியப்புதான் மேலிடுகிறது. இக்கரையிலிருந்து நான் நோக்கும்போது, இந்த உலகின் நிம்மதியின்மைக்குக் காரணம் மனித உறவிற்கான தேடல்தானோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும், இம்முறை எப்படியாவது மனித உறவுகளின் நடைமுறை வழக்கங்களைப் புரிந்துக்கொண்டுவிட வேண்டும், என்று முனையும் என் தோழியைப் பார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் அவள் தோல்வியுற்று, அத்தேடலால் விளையும் காயங்களுக்கு மருந்தாக ஓயாத பொறுமையுடன் உடலுறவுச் சடங்கைப் நடத்திவிட்டு வருகிறாள். ஒவ்வொரு முறையும் விடை கிடைக்காமல் அவள் திரும்பும்போ...