Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஏன் அகிம்சைப் போராட்டமே உகந்தது?

ஏன் அகிம்சைப் போராட்டமே உகந்தது? சில காரணங்கள்:

ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டால் அரசு இயந்திரம் தன்னுடைய போர்ப்படையை முடுக்கிவிடும்; அதற்கு ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று பெயர் சூட்டும்.

ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டால் பிற நாடுகள் அப்பிரச்னையில் தலையிட முற்படும்; அதற்கு ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமைதியை நிலைநாட்டும் முயற்சி’ என்று பெயர் சூட்டும்.

சுருங்கச் சொன்னால், சர்வாதிகாரமும் பிற நாடுகளும் உபயோகிக்கும் வன்முறைக்கு ஆயுதப் போராட்டத்தால் மறு அங்கீகாரம் கிடைத்துவிடும்.

ஆயுதப் போராட்டத்தைதான் சர்வாதிகாரிகள் விரும்புவார்கள்; அமைதியான போராட்டத்தில் கூட வேண்டுமென்றே வன்முறையைத் தூண்டிவிட முயற்சிப்பார்கள். அப்பொழுதுதான் அவர்களால் தன் தரப்பு வன்முறைக்கு நியாயம் கற்பிக்க முடியும்.

ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டால் ஒடுக்குபவர்கள் ஒடுக்கப்படுபவர்களை ‘அதோ தீவிரவாதிகள்’ என்று எளிதாக முத்திரை குத்தி, விவாதத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டுவிடுவார்கள்.

ஆயுதப் போராட்டத்தின் பணிகள் உடல்பலத்தையும் அதிகம் நம்பியிருப்பவை (பெரும்பாலும் ஆண்களே அதில் ஈடுபடுகிறார்கள்; பெண்களின் எண்ணிக்கை குறைவு). சண்டையிட முடியாதவர்கள் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்; ஓரங்கட்டப்படுவார்கள்.

நடுவில் சிக்கும் அப்பாவி மக்களின் துயரும், சமூகக் கட்டமைப்பின் வீழ்ச்சியும் ஆயுதப் போராட்டத்தில் தவிர்க்க முடியாதது. குறிப்பாக நவீன போர் ஆயுதங்களைப் பயன்படுத்தும் போராட்டங்களால் அவற்றைத் தவிர்க்கவே முடியாது.

ஆயுதப் போராட்டங்களுக்குத் தொடர்ச்சியாக ஆயுதங்கள் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும், அதற்கு வெளிநாடுகள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களின் தயவு தேவைப்படும். அதற்கு விலையாக சிறிதளவேணும் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.

ஆயுதப்போராட்டம் ஒரு போராக முற்றினால், அப்பாவி மக்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாவார்கள்; சமூகக் கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக வீழும்; ஒரு தலைமுறையே காணாமல் போகும்.

ஆயுதப் போராட்டத்தின் போக்கு இயல்பாகவே கணிக்க இயலாதது; எனவே பெரும்பாலான போராட்டங்கள் மைய நோக்கங்களிலிருந்து விலகி, பிற குழுக்களால் கடத்தப்பட்டு அங்கீகாரம் இழக்கின்றன.

அப்படியே ஒரு ஆயுதப் போராட்டம் வெற்றியடைந்தாலும், நிகழ்ந்த வன்முறைகளைக் கண்டு அந்த சமூகம் அதிர்ச்சியில் உறைந்து உளவியல் ரீதியாக பாதிப்படைந்திருக்கும். அதிலிருந்து மீண்டு வர அதற்கு சில தலைமுறைகள் பிடிக்கும்.

மேலும், அப்படியே ஆயுதப் போராட்டம் வெற்றியடைந்தாலும், எப்படியும் அது சமூகத்தின் ஒரு பகுதியினருக்குப் பழிவாங்கும் உந்துதலை தந்தே தீரும். அதன் விளைவாக பிற்காலத்தில் மீண்டும் வன்முறை வெடிக்கும்.

மேலே குறிப்பிட்ட பெரும்பாலான காரணங்கள் அறம் என்பதைத் தாண்டி நடைமுறை யதார்த்தம் சார்ந்தவை.

- İyad el-Baghdadi
(தமிழில்: வ.விஷ்ணு)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி