ஹாசிப் கான்
Courtesy: Vikatan எல்லோரைப் போலவும் பல்வேறு கார்ட்டூன் சித்திரங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு கார்ட்டூனின் அங்கமாகவே உணர்ந்தது ஹாசிப் கானின் சித்திரங்களில்தான். First person camera போல் இதோ ஒரு first person cartoon. டரியல் ஆகி ஆப்பரேஷன் தியேட்டரில் நிராதரவாகப் படுத்திருக்கிறோம். அரை போதையில் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தால்... மூஞ்சிக்கருகே ஐந்து சர்ஜன்கள் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று வரவேற்க, “என்னது இன்னும ... ் முடியலியா?” என்று மிச்ச சொச்ச உயிரும் போகிறது. இந்த சித்திரத்தில் நாமும் ஒரு பாத்திரம். ஹாசிப் கானின் நகைச்சுவை சித்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். நான்கு வருடங்களுக்கு முன் இதைப் பார்த்தவுடன் நிலைகொள்ளாமல் சிரித்தபடி நிலைமையை நொந்துகொண்டது இன்னும் நினைவில் இருக்கிறது. வயதாகவே ஆகாது இந்த கலாட்டூனுக்கு. வருடா வருடம் சர்ஜன்கள் மட்டும் மாற, காட்சி என்னவோ அப்படியேதான் இருக்கப்போகிறது. மன்மோகன் இடத்தில் மோடியை கற்பனை செய்து பார்த்தேன். இன்னும் அதிக சிரிப்பு, இன்னும் அதிக கடுப்பு. ...