நூலிலிருந்து சீரிஸ் - 3: அவுரங்கசீப்பிடம் இந்தக் கேள்வியைக் கேட்டீர்களா?
// கேள்வி: பணமதிப்புநீக்க நடவடிக்கையால் பாலியல் தொழில் சீர்குலைந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அதை சேர்த்து கணக்கிட்டால் demonetisation-இன் நன்மைகள் என்று இதுவரை 194 விஷயங்களை சொல்லிவிட்டார்கள். சயீத் அன்வர் போல் 194 ரன்னில் இருப்பது உறுத்தலாக இருக்கிறது. டெண்டுல்கரைப் போல் அது இருநூறைத் தொட்டால் நன்றாக இருக்குமே என்று ஒரு சின்ன நப்பாசை. - க.பாஸ்கரன் பதில்: அன்புள்ள பாஸ்கரன். பணமதிப்புநீக்க நடவடிக்கையின் நன்மைகள் எப்பொழுதோ 200-ஐத் தொட்டுவிட்டது. பேனிக் ஆகிவிடுவீர்கள் என்பதால் அதை வெளியே சொல்லவில்லை. இப்பொழுது நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்பதற்காக உங்களிடம் சொல்கிறேன். But remember, don't panic! 195. சென்ற ஆண்டு நவம்பர் 8ம் தேதி நம்மை ஒரு சூரியப் புயல் தாக்க இருந்தது தெரியுமா? ஆனால் நல்லவேளை, பிரதமர் அவர்கள் தொலைக்காட்சியில் ‘500, 1000 ஊ ஊ’ என்று அறிவித்தாலும் அறிவித்தார், அதன் விளைவாக தொலைக்காட்சி நிலையத்தில் ஒருவகையான மின்காந்த எதிர்வலைகள் எழுந்தன. அது சத்தமில்லாமல் விண்ணைப் பிளந்து, உலகின் தொலை தொடர்பு சாதனங்களை அழிக்க விரைந்து வந்துகொண்டிருந்த அந்த சூரியப் புயல...