எழுந்து நிற்காமை
தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காதவர்களை தேச விரோதிகள் என்று சொல்வது எவ்வாறு தவறோ, அதே போல் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காதவர்களைத் தமிழின விரோதிகள் என்று சொல்வதும் தவறு - என்ற பொருளில் நண்பர்கள் சிலர் ஒப்பீடு செய்ததைக் கண்டேன். இரண்டும் ஒன்றுதான், வித்தியாசமே இல்லை என்பது இறுக்கமான பார்வை. இரண்டிற்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. இரு தரப்பினரின் காரணமும் நியாயமும் வெவ்வேறானவை. தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காவிடில் தேச விரோதி என்று சொல்பவர்கள் தேசிய கீதத்தை இந்திய ஒற்றுமையின் குறியீடாகப் பார்ப்பவர்கள். அதற்கு எழுந்து நிற்காதவர்களை அந்த ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகக் கருதுபவர்கள். பெரும்பான்மை எழுந்து நிற்க விருப்பப்படுவதைத் தவிர வேறென்ன நியாயம் வேண்டும் அதைக் கட்டாயமாக்குவதற்கு என்று நினைப்பவர்கள். பெரும்பான்மைதான் அவர்கள் வைக்கும் அங்கீகாரம், அதற்கு எதிரானவர்கள் அவர்கள் பார்வையில் தேச விரோதிகள். தற்காலத்தில் இதற்குள் இந்து மத விரோதி என்ற கிளையும் அதீதமாக உண்டு. தேசிய கீதத்தை வைத்து வேண்டுமென்றே பிரிவினை அரசியல் செய்பவர்கள் அல்லாது, மெய்யாகவே நாட்டின் ஒற்றுமையின்பால...