அசாசின்ஸ் க்ரீட் ஒரிஜின்ஸ்
'அசாசின்ஸ் க்ரீட்' வீடியோ கேம் சீரிசில் கடைசியாக வந்த ‘அசாசின்ஸ் க்ரீட் ஒரிஜின்ஸ்’ வீடியோ கேமை இப்பொழுதுதான் முழுமையாக அனுபவிக்க முடிந்தது. அசாசின்ஸ், டெம்ப்ளார்ஸ் என்று இரண்டு எதிரெதிர் குழுக்கள் உலகம் முழுவதும் காலம் காலமாகப் போரிட்டு வருகின்றன. இரண்டுமே அமைதியை விரும்புபவை, ஆனால் வழிமுறைகள் வெவ்வேறு. ஒழுங்கின் மூலமாகத்தான் அமைதியைக் கொண்டுவர முடியும் என்று டெம்ப்ளார்கள் அதிகாரத்தைக் குவிப்பார்கள். இல்லை, கட்டற்ற சுதந்திரத்தின் மூலமாகவே அமைதியைக் கொண்டுவர முடியும் என்று அசாசின்கள் அதிகார பீடங்களைத் தகர்த்துக்கொண்டே இருப்பார்கள். இந்த அசாசின் குழு எப்படி உருவானது என்று சொல்லும் கேம்தான் இந்த ஒரிஜின்ஸ். 2007-ல் முதல் கேம் வந்தது. பத்து வருடங்கள் கழித்து பத்தாவது மெயின்ஸ்ட்ரீம் கேமாக ஒரிஜின்ஸ் வந்திருக்கிறது. இதற்கு முன்பு கடைசியாக வெளிவந்த யூனிட்டி (ப்ரெஞ்சுப் புரட்சி காலம்) மற்றும் சிண்டிகேட் (தொழிற்புரட்சி காலம்) சரியாக ஓடவில்லை (எனக்கு யூனிட்டி மிகவும் பிடித்தது, ஆனால் டெக்னிகல் பிரச்னைகள் நிறைய வந்து விளையாடும் மூடை ரொம்பவே கெடுத்தது). போச்சு, அசாசின்ஸ் க்ரீட் கேம் ...