எலிமென்டரி
அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'எலிமென்டரி' ஷெர்லாக் ஹோம்ஸ் சீரியலும், பிரிட்டனின் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஷெர்லாக் சீரியலும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் துவங்கின. அதனாலோ என்னவோ, இரண்டையும் ரசிகர்கள் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். எனக்கு இவை இரண்டையும் ஒப்பிடுவதில் உடன்பாடு இல்லை. இரண்டும் வெவ்வேறு உலகத்தில் இயங்குபவை. தனிப்பட்ட அளவில் எனக்கு பெனடிக்ட் கும்பர்பேட்ச் சிறந்த ஷெர்லாக்காகத் தெரிந்தாலும், எலிமென்டரி சீரியலில் வரும் சில காட்சிகளும் தருணங்களும் பிபிசி சீரியலைப் போகிற போக்கில் தூக்கி சாப்பிட்டு விடும். பிபிசி ஷெர்லாக் ஒரு ஹீரோ. ஆனால் எலிமென்டரி ஷெர்லாக் நம்மைப் போன்ற ஒருவன்; போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி மீள்பவன்; அவனுக்கும் உடல் உபாதைகள் வரும்; சக மக்களோடு சேர்ந்து பயணிக்கும் நிர்பந்தம் இருக்கும். இவற்றையெல்லாம் செய்தும்கூட அவன் ஒரு டிபிக்கல் ஷெர்லாக்காகவும் இருப்பான். அவ்வாறு இருக்க முயன்று இயல்பாகக் கஷ்டப்படுவான்;அதன் பாதிப்புகளை அனுபவிப்பான். எலிமென்டரியை நான் ஒரு சைக்கலாஜிக்கல் டிராமாவாகத்தான் வகைப்படுத்துவேன். ஒவ்...