மன்னிப்பு
சமீபகாலத்தில் தமிழ்நாட்டில் மன்னிப்பு கேட்பதற்கு மிகவும் அருகில் வந்தது சிவக்குமார்தான். மற்ற அபாலஜிக்கள் எல்லாம் அபாலஜியே கிடையாது.
1. தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் (நிபந்தனை வைத்தல்)
2. உண்மைக்குப் புறம்பாக இருப்பின் பகிர்ந்தது தவறுதான்.
3. பெருவாரியானவர்கள் தவறு என்று நினைப்பதால் மன்னிப்பு கேட்கிறேன் (சிவக்குமார்)
4. என் செயல்களுக்கு வருந்துகிறேன் (மறைமுகப் பொறுப்புத் துறப்பு).
5. தவறுகள் நடப்பது இயற்கை, ஆகவே... (நீர்த்துப்போகச்செய்தல்)
6. என்னையறியாமல் புண்படுத்திவிட்டேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் சொற்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்று நினைக்கவில்லை (தான் சரியாகத்தான் பேசினேன் என்று முட்டுக்கொடுத்தல்).
கடைசியாக சிவக்குமார் 'வெரி சாரி' என்றார். அதுதான் அபாலஜி. மன்னிப்பதும் மன்னிக்காமல் இருப்பதும் அந்தப் பையனின் முடிவு. அந்த 'வெரி சாரி' ஆனால் அரிய நிகழ்வு.

Comments
Post a Comment