கல்லணைக் கிளி
கரிகால் பெருவளத்தான் தான் கட்டிய கல்லணையை நோட்டம் விட்டபடித் தன் யானை மீது அமர்ந்திருந்தார். அவரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலியில் ‘யானைப் பூங்கா, உள்ளே அனுமதி இல்லை’ என்று போர்டு மாட்டியிருந்தது. அந்த வேலியில் சில மாடுகள் கட்டிப் போடப்பட்டு அதை மேய்த்துக் கொண்டிருந்தவன் கரிகாலருக்கு இணையாக அந்த அதிசயத்தைப் பார்த்துகொண்டிருக்க பூங்காவைச் சுற்றிலும் தார்சாலை போடப்பட்டு ஹாரன் சத்தம் காதைக் கிழித்துக்கொண்டிருந்தது. ஆறுவயதில் நான் சிறுவர் மலரில் பார்த்த கார்ட்டூன் கல்லணை இதுவல்ல, இது என்னமோ சென்னை மெரினா பீச் ரேஞ்சுக்கு திருச்சிராப்பள்ளிக் குரல்களில் கலகலத்துக்கொண்டிருந்தது. பாப்கார்ன், கோன் ஐஸ், மீன் வறுவல், சோளம், என்று அச்சு அசல் திருச்சி பீச்தான் ! யானைகளே நிற்க பயப்படும் அணை மதகுகளினூடே வெண்நாரைகளும் கொக்குகளும் ‘வாடி இருக்குமாம்’ படலத்தை நடத்திக்கோண்டிருக்க, அவைகளின் கணுக்கால் அளவிற்கு ஏதோ தண்ணீர் ஓடியது. கர்னாடக ஷெட்டர்வாளின் சூழ்ச்சியைக் கரிகாலர் சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தார். கொக்குகளைப் பிடிக்க என் ...