Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பிறந்தநாள்


          
          ஒரு வயசுக்கு மேல் உலகம் நம் பிறந்தநாளைக் கொண்டாட நாம் பாடுபட வேண்டும் என்று எங்கோ படித்துவிட்டேன், அப்போதிலிருந்து பிறந்தநாள் கொண்டாடுவதை நிறுத்தியாகிவிட்டது. சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று நிறைய பேர் என் வீட்டிற்கு வந்து, நான் வீட்டில் இல்லாததைப் பார்த்து பல்பு வாங்கியிருக்கிறார்கள் (அடுத்த நாள் அதற்காக எனக்கு செமத்தியான அடி விழும், அது வேறு டிபார்ட்மெண்ட்). “நான் என்ன பெரிய காந்தியா நேருவா ?”, என்று பதில் சொல்லி பல கலவரங்களைக் கேண்டீனில் நிகழ்த்தியிருக்கிறேன். பர்த்டே ட்ரீட் என்று யாராவது வாயைத் திறந்தாலே அங்கிருந்து நைசாக நழுவிவிடுவதைப் பார்த்து பார்த்து, இனி பர்ஸை பிக்பாக்கெட் அடிப்பதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு நண்பர்கள் வட்டம் வந்திருப்பதாக விவரமறிந்தோர் கூறுகின்றனர். வருடா வருடம் இவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எங்காவது ஓடிவிடுகிறேன் என்று இந்த வருடம் வித்தியாசமாக ஒரு பிளான் போட்டார்கள். என் அம்மாவுக்கு ஃபோனைப் போட்டு, “இன்னிக்கு எப்படியாவது விஷ்ணுவை வீட்டுல கட்டிப்போட்ருங்கம்மா” என்று சொல்லி வன்முறையைக் கையிலெடுத்தார்கள். ஊஹும்ம் ! சிக்குவேனா ? வழக்கம்போல அனைவருக்கும் தண்ணிகாட்டி தப்பித்துவிட்டேன். “எதையாச்சும் சாதிச்சுட்டு ட்ரீட் தறேன்” என்று வாயைக் கொடுத்து, “பாஸ் ! நீங்க எங்கேயோ போயிட்டீங்க !” என்று பலபேரிடம் கலாய் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் இன்றைக்கு, “நீ பொறந்ததே ஒரு சாதனைதான்டா !” என்று ஒரு அக்கா திடீரென்று லந்து பண்ண, கொஞ்சம் உஷாராகிவிட்டேன். புதுசு புதுசா கண்டுபுடிக்கிறாய்ங்கப்பா !

          ஆனால் இந்த வருடம் என் தம்பியிடம் வசமாக சிக்கிக்கொண்டு விட்டேன். காலை குளித்துவிட்டு வெளியே வந்தபோது பாத்ரூம் வாசலில் ஒரு கிஃப்ட் தட்டுப்பட்டது. அங்கு ஆரம்பித்த சர்ப்ரைஸ், இராத்திரி எட்டரை மணிக்கு வீட்டிற்குள் நான் நுழைய, என் பெரியப்பா வாங்கி வைத்திருந்த கேக் எனக்காகக் காத்திருந்தபோது நிறைவடைந்தது. இது என் தம்பி என்னைப்பார்த்து “மாட்டிக்கிட்டியா ?”, என்று சிரஞ்சீவித்தபோது க்ளிக்கிய படம். அவனுக்கு என் முத்தங்கள் என்றும்...

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி