டைட்டானிக் - ஒரு பொறியியல் தோல்வி
இன்று “Strength of Materials” செய்முறை வகுப்பில் எந்த உலோகத்தை எதற்குப் பயன்படுத்துவது என்பதை விளக்க ஆசிரியர் ஒரு சம்பவத்தை சொன்னார்: எந்தப் பொருளை உற்பத்தி செய்தாலும் அதை சந்தைப் படுத்துவதற்கு முன்பு அதனை ஏகப்பட்ட பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். இந்த வேகத்தில் மோதினால் இதற்கு எவ்வளவு சேதம் உண்டாகிறது, இதை உபயோகிப்பவரின் பாதுகாப்பை இது எந்த அளவிற்கு உறுதி செய்கிறது, இதன் மீது எவ்வளவு விசை கொடுத்தால் உடைகிறது அல்லது வளைகிறது, என்று பலப்பல பரீட்சைகளில் பாஸ் ஆனால் மட்டுமே அது சந்தைக்கு அல்லது பயன்பாட்டிற்கு வரும். ஆனால் மூழ்கவே மூழ்காது என்று சொல்லப்பட்ட டைட்டானிக் கப்பல் உடைந்து உள்ளே போனதற்கு இந்த உலோகத் தேர்வில் ஏற்பட்ட தவறு ஒரு முக்கியமான காரணம் ! எப்படி ? டைட்டானிக்கின் அடிப்பாகம் “Mild Steel” என்று சொல்லப்படும் மிதமான எஃகு கொண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த Mild Steel நல்ல பலசாலியான உலோகக் கலவைதான். சாதாரண சைக்கிளுக்கே ஏகப்பட்ட டெஸ்டுகள் இருக்கின்றன, இது கப்பலின் அடிப்பாகமாக வேறு ஆகப்போகிறது, எனவே இதனைப் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் என்று பாடாய்ப்...