இரத்ததானம்
அவர் ஒரு அருணாச்சலப் பிரதேசக்காரர். பிறந்ததிலிருந்து இருதயக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு 40 வயதில் சென்னை பெரம்பூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது A1+ ரத்தம் வங்கியில் கிடைக்காமல் போக, கடைசி நேரத்தில் இரண்டு நல்ல நெஞ்சங்களை ரத்தம் தர அங்கு அழைத்து சென்றேன். ரத்ததானம் முடிந்தபின் அவரை சந்தித்து அடுத்த நாள் நடைபெற இருக்கும் அறுவை சிகிச்சைக்கு நம்பிக்கை தெரிவித்துவிட்டு வந்தோம். முந்தாநாள் அவரது அண்ணன் என்னைத் தொடர்பு கொண்டு தட்டுத்தடுமாறி உடைந்த ஆங்கிலத்தில் குரலுடைந்து பேசினார். ”ஆப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சுது சார். பிரச்னை ஒன்னும் இனிமே இல்லைனு சொல்றாங்க. கடைசி நேரத்துல வந்து என் தம்பி உயிரைக் காப்பாத்தின அந்த ரெண்டு பேரை என்னிக்கும் நாங்க மறக்கமாட்டோம்”, என்றார். தமிழகத்து ரத்தம் தற்போது அருணாசலப்பிரதேச உயிரினுள் கலந்து ஒடிக்கொண்டிருக்கிறது. நாம் எவ்வளவோ பிரிவுகளாலும் நாடுகளாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும் இந்த ரத்தம் என்கிற வஸ்துவின் தேவை ஏற்படுகிறபோது அவையெல்லாம் தவிடுபொடியாகிவிடுகிறது என்பதை உணர்ந்து அன்றே இரத்ததானம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். நீங்கள் ?
Comments
Post a Comment