Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

துக்ளக் - 43வது ஆண்டு விழா

சோவின் பல கருத்துகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும் வருடா வருடம் அவர் சொல்லும் ஏதாவது இரண்டு கருத்துகள் என்னிடம் கவன ஈர்ப்புத் தீர்மானம் பெற்றுவிடும் என்பதால் துக்ளக் ஆண்டு விழாவை நான் காணத் தவறுவதில்லை. இந்த வருடம் அப்படி முக்கியத்துவம் பெற்றவை இரண்டு:

1. ரஜினிகாந்தைப் பற்றி ஏதாவது சொன்னால் வழக்கமாக அரங்கத்தைப் பிளக்கும் கரகோஷம் இந்த வருடம் அவ்வளவாக இல்லை. "தனி வழி உருப்படாத வழி" என்று கூட்டத்தில் ஒருவர் கத்தி சோவிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். "தனி வழி என்றால் நான் இப்படிப் போகப் போகிறேன், இஷ்டமுள்ளவர்கள் பின்னால் வாருங்கள் என்று விடுக்கும் அழைப்பு; அதுவே தலைமைப்பண்பின் அடையாளம்" என்று ஒரு போடு போட்டார் சோ ! ரஜினியின் ரியாக்சனைப் பார்ப்பதற்காக என்றே வீடியோ சிடி வாங்குவது என்று உத்தேசம். ஆகமொத்தம் கலகம் ஒன்றை ஆரம்பித்து வைத்திருக்கிறார் சோ, இது எங்க போய் முடியப் போகுதோ...

2. அ.தி.மு.க.-வை சோ ஏன் ரொம்ப‌வும் எதிர்க்கவில்லை என்பதற்கான விடை நிறைய பேருக்குத் தெரிந்திருந்தாலும் வாய்மொழியாக அதை சோ போட்டு உடைத்தார். "தி.மு.க. திரும்பி வந்துவிடக்கூடாது, அதனால் அ.தி.மு.க.-வைப் பெரிதாக விமர்சித்து அதற்குக் கெட்ட பெயர் உண்டாக வழி செய்ய நான் விரும்பவில்லை; மற்றபடி ஜெ. அரசு செய்யும் எல்லாவற்றையும் நான் ஆதரித்து விடவில்லை", என்றார்.

கூட்டத்தில் இளைஞர்கள் இந்த முறை அதிகம் காணப்பட்டனர். இதைக் கண்டு மகிழ்வுறுவதா அல்லது பயப்படுவதா என்று தெரியவில்லை. வழக்கம்போல் அனைவரும் சேர்ந்து பாடும் தேசிய கீதம் என்னுள்ளே சிலிர்ப்பை உண்டாக்கத் தவறவில்லை. இந்த வருடப் பொங்கல் பிளான் இனிதே நடந்து முடிந்தது :-)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி