Posts

Showing posts from February, 2013
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

எதுவா இருந்தாலும் இவங்ககிட்ட டீல் பண்ணிக்குங்க

Image
          வாழ்க்கையில் ஒரு நல்ல ஆசிரியர் எல்லோருக்கும் திடீரென்று என்றாவது வாய்த்துவிடுகிறார் ! அவரது பார்வையில் படும் நூறு முகங்களில் நாமும் ஒருவராக ஜஸ்ட் லைக் தட் கடந்து போனாலும் நம்மைப் பொறுத்தவரையில் நம்மிடையே ஒரு பெரும் மாற்றத்தினை உண்டாக்கிவிட்டுப் போயிருப்பார் அவர். நாம் சிந்திக்கும் முறையிலிருந்து விரும்புகிற பாடங்கள் வரை அத்தனை விஷயங்களிலும் ஏதேனும் ஒரு பாதிப்பை உண்டு பண்ணிவிட்டு இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் அடுத்த செட் மாணவர்களை கவனிக்கத் துவங்கிவிடுவார் ! நாம் இன்று இவ்வாறு இருக்கிறோம் என்றால், நாம் இத்தனை எண்ட்ராப்பிகளை இந்தப் பிரபஞ்சத்திற்கு அளித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் அதில் பெரும் பங்கு வகித்துக்கொண்டிருப்பவர் நிச்சயமாக ஒரு ஆசிரியராகத்தான் இருக்க முடியும் ! ஒன்பதாம் வகுப்பிலிருந்து எனக்கு வாய்த்த இயற்பியல் ஆசிரியர்கள் என் சிந்தனைப் போக்கை எப்படியெப்படியெல்லாமோ செலுத்தினார்கள். கூடவே நம்ம சுஜாதா சாரோட புக்குகளும் சேர்ந்து போக, “ரிலேட்டிவிட்டி, குவாண்டம் தியரி, ஸ்பெல்லிங் தெரியுமா ?”, என்று அம்மாவிடம் சீன் ...

பேட்மேன் - ஜோக்கர்

Image
          "The man who laughs", என்னும் காமிக் புத்தகத்தை வாசித்து முடித்தேன். உலகில் அனைவருக்கும் பயத்தை உண்டு பண்ணுகிற, மிகவும் அபாயகரமான, அதே சமயம் அனைவருக்கும் பிடித்த சைக்கோ வில்லனான ’Joker' முதன்முதலில் தோன்றியது இந்தக் கதையில்தான். திடீரென்று காத ்தம் பெருநகரத்தில் பல இடங்களில் பலருடைய சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. சடலங்கள் அனைத்தும் வெள்ளை வெளேர் என்று வெளுத்துப்போய் பேயறைந்து, கண்கள் வெளியே திமிற யத்தனிப்பதுபோல் காணப்படுகின்றன இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாமல் பேட்மேனும், போலீஸும் முடியைப் பிய்த்துக் கொண்டு இருக்க யாருமே எதிர்ப்பார்க்காத விதமாகத் தோன்றுகிறான் ஜோக்கர்.            இரசாயனம் பட்டதால் வெள்ளையான முகம், பச்சை முடி என்று கோமாளி போல் காட்சியளிக்கும் ஜோக்கர் இந்த உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட விதம் சுவாரசியமானது. ஒரு பத்திரிகையாளர் சடலங்கள் உள்ள இடத்தில் நின்று, நேரடி ஒளிபரப்பில் பேசிக்கொண்டிருக...

12 Angry Men (1957)

Image
           நண்பன் ஆதித்யாவின் பரிந்துரையின் பேரில் "12 Angry men" என்னும் திரைப்படம் பார்த்து முடித்தேன். கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களின் மீது எனக்குண்டான தனிப்பட்ட விருப்பத்தினை இப்படம் பன்மடங்கு அதிகரித்தது. நூறு குற்றவாளிகள் தப்பிக் கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது, என்கிற ஜனநாயக நீதிமுறையின் அடிப்படைத் தத்துவத்தை எத்தனை ஜூரிக்கள் உண்மையாகவே உணர்ந்திருக்கிறார்கள் என்ற பலமான கேள்வியை இப்படம் எழுப்புகிறது.            ஒரு 18 வயதுப் பையன் தன் தந்தையைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றக் கூண்டில் நிற்பதாகப் படம் தொடங்குகிறது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு அவன் கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டு விட்டது. கொலை செய்ததற்கான தண்டனை மரண தண்டனைதான் என்கிற சூழ்நிலையில் அவனுக்கு மரண தண்டனை அளிப்பதா வேண்டாமா என்று கலந்துரையாடி ஒரு இறுதி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி ஒரு 12 பேரிடம் ஆணையிடுகிறார். அந்தப் பன்னிரண்டு பேரும் கலந்துரையாட ஒரு அறைக்குள் நுழைகிறார்கள்....

விஸ்வரூபம்

Image
                    IMDB ரேட்டிங் பார்த்தவுடன் விஸ்வரூபம் படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று நைட் ஷோவெல்லாம் போய், தூக்கம் தொலைத்து, அதிகாலை வீட்டிற்கு வந்து படுக்கையில் சாய்ந்தபோதுதான் தெரிந்தது, இது அவ்ளோ வொர்த் எல்லாம் இல்லை என்று. ஆங்காங்கே ஊசி குத்துவது போன்ற செருக் வசனங்கள், சில சமயம் வழவழா மொக்கை, சில இடங்களில் உண்மைச் சம்பவங்களின் துணுக்கு, சில இடங்களில் தமிழ் சினிமாவுக்கே உரித்தான ரசிகனின் ‘தலைவாஆஆ’ காட்சிகள், இதற்கு ஊடே நாடு கடந்து, மதம் கடந்து, மொழி கடந்து, கடைசியில் செம சூப்பரான க்ளைமாக்ஸுடன் படத்திற்கு இனிதே தொடரும் போட்டிருக்கிறார்கள். படம் வெளியாவதற்கு முன்பே தடை செய்ய வேண்டும் என்ற இஸ்லாமிய அமைப்பினர்களிடமிருந்து நான் முரண்பட்டாலும், படம் பார்த்த பிறகு அவர்களின் அச்சத்தை என்னால் உணர முடிந்தது. ஆம், சர்ச்சைக்குரிய காட்சிகள் சில அங்கங்கே தென்படுவதுபோலத்தான் தெரிந்தன. நிச்சயமாகத் தொழில்நுட்ப ரீதியாகத் தமிழ் சினிமாவை இப்படம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்...