Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

எதுவா இருந்தாலும் இவங்ககிட்ட டீல் பண்ணிக்குங்க


          வாழ்க்கையில் ஒரு நல்ல ஆசிரியர் எல்லோருக்கும் திடீரென்று என்றாவது வாய்த்துவிடுகிறார் ! அவரது பார்வையில் படும் நூறு முகங்களில் நாமும் ஒருவராக ஜஸ்ட் லைக் தட் கடந்து போனாலும் நம்மைப் பொறுத்தவரையில் நம்மிடையே ஒரு பெரும் மாற்றத்தினை உண்டாக்கிவிட்டுப் போயிருப்பார் அவர். நாம் சிந்திக்கும் முறையிலிருந்து விரும்புகிற பாடங்கள் வரை அத்தனை விஷயங்களிலும் ஏதேனும் ஒரு பாதிப்பை உண்டு பண்ணிவிட்டு இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் அடுத்த செட் மாணவர்களை கவனிக்கத் துவங்கிவிடுவார் ! நாம் இன்று இவ்வாறு இருக்கிறோம் என்றால், நாம் இத்தனை எண்ட்ராப்பிகளை இந்தப் பிரபஞ்சத்திற்கு அளித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் அதில் பெரும் பங்கு வகித்துக்கொண்டிருப்பவர் நிச்சயமாக ஒரு ஆசிரியராகத்தான் இருக்க முடியும் ! ஒன்பதாம் வகுப்பிலிருந்து எனக்கு வாய்த்த இயற்பியல் ஆசிரியர்கள் என் சிந்தனைப் போக்கை எப்படியெப்படியெல்லாமோ செலுத்தினார்கள். கூடவே நம்ம சுஜாதா சாரோட புக்குகளும் சேர்ந்து போக, “ரிலேட்டிவிட்டி, குவாண்டம் தியரி, ஸ்பெல்லிங் தெரியுமா ?”, என்று அம்மாவிடம் சீன் போட்ட கூத்துகளை எல்லாம் இன்று நினைத்தால் கொஞ்சம் அபரிமிதமாகவே சிலிர்க்கிறது ! ரொம்ப சயன்ஸ் பேசறேனா ? மொக்கையா இருக்கா ? பிரின்ஸி தாமஸ் மேடம், விஜய் சார், இவர்கள் இரண்டு பேர்தான் காரணம், உடனே முதுகிலிருந்து பொருளை உருவிக்கொண்டு தேடுதல் வேட்டைக்குக் கிளம்பவும் ! தமிழ்ல ரொம்ப கிறுக்கறேனா ? சாய் சார், வித்யாசேகரன் ஐயா, இவங்கதான் அந்தப் புண்ணியவான்கள். உடனே அவர்களுக்குப் ஃபோன் பண்ணி, “நாங்க என்னய்யா உங்களுக்குக் கெடுதல் பண்ணோம்”, என்று கேட்கவும் ! “வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே” என்கிறேனா ? அதோ ஆக்னஸ் மேம், கிட்டே போனாலே கைமா பண்ணிவிடுவார் ஜாக்கிரதை ! இந்த விஷ்ணு இன்று இவ்வாறு இருப்பது பிடிக்கவில்லையா ? சத்தியமாக அதற்கு நான் மட்டும் காரணம் இல்லை மை லார்ட் !

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

நவீன இந்தியாவின் சிற்பி

இந்தியாவும் இந்தியும்