பாரம்பரியச் சின்னம் ஆகுமா பழவேற்காடு?
பழவேற்காடு ஏரி பழவேற்காடு, கிட்டத்தட்ட சென்னை மாநகரின் பரப்பளவு கொண்ட பழவேற்காடு ஏரியின் கரையில் அமைந்துள்ள சிறிய கிராமம். ஆங்கிலேயருக்கு முந்தைய பழங்கால தென் இந்தியாவில் பூம்புகாருக்குப் பிறகு மிகப்பெரும் துறைமுக நடவடிக்கைகள் மிகுந்த இடமாகப் பழவேற்காடு இருந்திருக்கிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்ன அடையாளத்தை பெறுவதற்கான தமிழகத்தின் பரிந்துரைப் பட்டியலில் பழவேற்காடும் இணைந்துள்ளது. ஆனால், தமிழக சுற்றுலாத் துறையின் கடைக்கண் பார்வை இன்னும் சரியாக இதன் மேல் விழவில்லை. பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட பழவேற்காட்டில் இன்னமும் மக்களின் பொருளாதாரத்திலும் சமூக அளவீட்டிலும் சமத்துவம் பெறாமல் பின்தங்கிய நிலைதான் இருக்கிறது. இயற்கை வளம் மிக்க பழவேற்காட்டின் தற்போதைய பிரச்னைகளைப் பார்ப்பதற்கு முன், பழவேற்காட்டில் அப்படி என்னதான் இருக்கிறது? பழவேற்காட்டில் ஒளிந்திருக்கும் சில வரலாற்று உண்மைகள் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு போகும். ஒரு சிறு உதாரணம், இன்று சென்னை என்கிற ஒரு மாநகரம் ...