Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஜில்ஜில் ஜிகர்தண்டா!


மு.கு: திரைப்படத்தின் போஸ்டர் வேற லெவல்! விரைவில் உத்திரவாதமாக நம் போஸ்டர்கள் உலகின் கவனத்தைப் பெறப்போகின்றன.

          என்ன திரைக்கதைப் பாணி என்றே தெரியவில்லை. முதலில் கார்த்திக் சுப்புராஜ் தற்போது புழக்கத்தில் உள்ள திரைக்கதை உத்தியை உபயோகப்படுத்துகிறாரா என்றே தெரியவில்லை. சுமார் இருபது குறும்படங்களின் சேர்க்கை, அக்குறும்படங்களின் திரைக்கதையில் உள்ள சிறு சிறு முடிச்சுகள் அப்பொழுதே செம சுவாரசியமாக அவிழ்க்கப்படும். ஆனால் திரைப்படத்தின் மைய முடிச்சு ஒரு மெல்லிய இழை போல மொத்தக் குறும்படங்களையும் ஆக்கிரமிக்கும். இந்த மைய முடிச்சு ஒவ்வொரு குறும்படங்களிலும் வளர்ந்துக்கொண்டே சென்று இறுதிக் காட்சியில் பிரம்மாண்டமாக அவிழும். தடாரென்று சந்தோஷ் நாராயணன் எண்ட்ரி, சிம்ஹாவின் முறுக்கிய மீசை, வெறிகொண்ட பார்வை. உண்மையை உணர்ந்துக்கொண்ட பார்வையாளனின் கை முடி சிலிர்த்துக்கொள்கிறது. திரையரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது.

          ஜிகர்தண்டா, கார்த்திக் சுப்புராஜின் திரைக்கதை மாயாஜாலம். ஒரே ஒரு இடம் தவிர மற்ற இடங்களில் சத்தியமாக அடுத்து என்ன ஆகும் என்று கணிக்கவே முடியவில்லை. கதை எதை நோக்கி நகர்கிறது, கதாநாயகனின் இறுதி நோக்கம் என்ன, பாடல் எங்கே தொடங்கும், எங்கே நிற்கும், எவன் எப்போது சாவான், ஒன்றையும் கணிக்க முடியவில்லை. படம் நெடுக திடுக் திடுக் திருப்பங்கள். இது போன்ற படங்களில் ப்ளாட் பாயிண்டுகளை எண்ணுவது கேனைத்தனம் என்று எண்ணிய பின்புதான் புரிந்தது. ஒவ்வொரு சீனின் இறுதியிலும் ஒரு மினி ப்ளாட் பாயிண்ட் ஒளிந்திருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசை எதிர்ப்பார்ப்பை எகிற வைத்து ப்ளாட் பாயிண்டில் உச்சக்கட்டத்தை அடைய, சரியாக மிதிவண்டி இடுக்கில் இண்டிகேட்டரை இடது பக்கம் போட்டுவிட்டு வலது பக்கம் வண்டியைத் திருப்புகிறார் இயக்குனர். ஆனால் இறுதிக்காட்சியில் அத்தனை முடிச்சுகளும் கச்சிதமாக அவிழ்க்கப்பட்டு திரைக்கதை முழுமையடைகிறது. பல்வேறு கணக்குகளைப் போட்டு, முடிச்சுகளை உருவாக்கி, அதை வழக்கமான பாணியில் அவிழ்க்காமல் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத இடத்தில் கச்சிதமாக அவிழ்த்து, திரைக்கதையைப் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஜீனியஸ்!

ஜிகர்தண்டாவை ஜில்ஜில் ஜிகர்தண்டாவாக ஆக்கியிருப்பது சிம்ஹாதான். மனிதர் மிரட்டியெடுக்கிறார். இறுதிக்காட்சியில் மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தின் ஊடே சிம்ஹா நாற்காலியிலிருந்து கீழே ஸ்லோ மோஷனில் விழ, அக்காட்சி மெதுவாக fade out ஆகி இயக்குனரின் பெயர் வர, அனைவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்கிறார்கள். இயக்குனருக்கு நம்முடைய பல்ஸ் தெரிந்திருக்கிறது. கோடம்பாக்கத்தில் டென்ட்டைப் போட்டு ஆணியை ஆழமாக அடித்து அமர்ந்துவிட்டார். இன்னும் அவருக்கு வயதும் களமும் இருக்கின்றன. அடித்து ஆடுவார் என்றே நினைக்கிறேன்.

அந்த மதுரக்கார மீசை முறுக்கல், அதைக் காட்சிப்படுத்தும் ஸ்லோ மோஷன் கேமரா, துணைக்கு வித்தியாசமான பின்னணி இசை, உலக லெவல் லைட்டிங், சூரியக் குடும்ப லெவல் திரைக்கதை, இந்த அறிவுஜீவி டமாரங்களையெல்லாம் தாண்டி மூன்று மணிநேரம் உட்கார முடிவதுதானே முதலில் முக்கியம்? அந்த வகையில் கட்டாயம் தவறவிட்டுவிடக்கூடாத திரைப்படம் ஜிகர்தண்டா. திரையரங்கில் சென்று பாருங்கள்.

Comments

  1. Very good review !! BGM and Cinematography holds an intangible baton throughout the film. A Masterclass Madurai movie..

    ReplyDelete

Post a Comment

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி