Posts

Showing posts from 2015
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஒரு பூட்டப்பட்ட அறைக்குள்

Image
ஒரு பூட்டப்பட்ட அறைக்குள் அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான். அந்த அறைக்கான சாவியும் அவன்தான். கடவுள் உள்ளே எட்டிப் பார்க்கிறார். பாவம் அவரால் கதவைத் தட்டத்தான் முடிகிறது. கதவைத் திறக்க வேண்டுமென்றால் அந்த சாவி வேண்டும்; அந்த சாவி வேண்டுமென்றால் கதவைத் திறக்க வேண்டும். கடவுள் காத்துக்கொண்டிருக்கிறார், எப்போது அவன் விழிப்பான் என்று. அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான், வேறொரு பூட்டப்பட்ட அறைக்குள் கடவுளை அடைத்துவிட்ட நிம்மதியில்.

Puli

          Did you happen to be an avid reader of children's books like Siruvar Malar, Gokulam, Chutti Vikatan in the 90's? 'Madhanakamarasan' comic strips, stories of a 'Sooniyaa Kaari' wanting a 'Maragadha' stone, a small girl battling a giant, Vedhaalam, prophecies, talking birds, helping animals, kidnapped 'ilavarasi', 'Raatchasan' guarding a mountain, the tiny 'Chithirakullargal', cursing witches, cursed people, and a hero who finally defeat the evil forces, marry the princess, and ultimately become the king? Well, I did, and that's the precise reason why I thoroughly enjoyed 'Puli'. It was a nostalgic moment watching all my childhood fantasies coming true in the big screen, and I was very much comfortable with all the magical elements in the film. Thank you 21st century.           'Puli' is definitely not Chimbudevan's best, but my favourite director didn't disappoint me. It'...

நாங்களும் ரவுடிதான்

Image
விக்னேஷ்: நீ ஒரு இலக்கிய வாசகன் . விஷ்ணு: என்னது ஏலக்கா வாசமா ? விக்னேஷ்: சிலப்பதிகாரம் படிப்பவன் வாசகன். இளங்கோவைப் படிப்பவன் இலக்கிய வாசகன். விஷ்ணு:   நான் உனக்கு ‘ இலக்கிய ரவுடி ’ னு பட்டம் குடுக்கலாம்னு பாக்கறேன். நீ கொடுத்த ஈபுக்ஸ்ல என்னன்னமோ இருக்கு. பிராமி எழுத்துகள் எல்லாம் இருக்குன்னா பாத்துக்கோயேன்! விக்னேஷ்: நானே முழுசா படிக்கல . எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான் . விஷ்ணு: இலக்கிய ரவுடியோட இலக்கணமே அதுதான். எல்லா இடத்திலும் இலக்கிய அறிவை வசூல் செய்வதுதான் அவன் வேலை . இலக்கிய ரவுடியும் ஏரியா பிரிப்பான். சிலப்பதிகாரம் உன்னுது , சீவக சிந்தாமணி என்னுதுன்னு . விக்னேஷ்: நீ சொல்றது எதுவும் புரியல. ஆதலால் நீ ஒரு சிறந்த விமர்சகனாக , சிறு பத்திரிகை கட்டுரையாளனாக பரிணமிக்க வாய்ப்புகள் ஏராளம் . விஷ்ணு: புரியலையா ? வளைஞ்சு நெளிஞ்சு படுத்துருக்கேன் , அதனால என் வார்த்தைகளில் ஏகப்பட்ட உள்மடிப்புகள் இருக்கும் . விக்னேஷ்: உலகமயமாக்கலுக்கு பின்னான வாழ்க்கை முறையின் கூறுகள் நீ படுத்திருப்பதில் வெளிப்படுகிறது . விஷ்ணு: இல்லை. நான் தனியாகப் ...

இந்தியாவும் இந்தியும்

Image
          மத்திய அரசின் ’இந்தி திவஸ்’ பற்றிய அறிவிப்பு மீண்டும் இந்தித் திணிப்பு பற்றிய விவாதத்தைத் துவக்கியிருக்கிறது. இந்தியா சுதந்திர நாடான காலத்திலிருந்தே இந்தியின் ‘பெரியண்ணன் மனோபாவம்’ மற்ற மொழிகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகத்தான் இருந்து வருகிறது. இந்தி எப்படி மற்ற மொழிகளின் இருப்பைப் பற்றிய அறிவையே நம்மிடமிருந்து மறைமுகமாக இல்லாமல் ஆக்குகிறது என்பதை வைத்து மேற்கண்ட வாக்கியத்தை நியாயப்படுத்தலாம். மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்த பின்னரும்(நல்லதுதான்), இந்தியின் ஆதிக்கத்தாலும் இந்திய மக்கள் மத்தியில் ஒருவகையான கற்பிதம் இயல்பாகத் தோன்றியது. அது என்ன கற்பிதம்? நாம் பொதுவாக ஒரு மாநிலத்துக்கென்று ஒரு அதிகாரப்பூர்வ பிராந்திய மொழிதான் இருக்குமென்றும் ஒரு மாநிலத்தில் ஒரு மொழிதான் பெரும்பான்மையாகப் பேசப்படுகிறது என்றும் கற்பிதம் செய்துகொள்கிறோம். அதாவது தமிழ்நாட்டில் தமிழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி என்று சமன்படுத்துகிறோம். இந்த சமன்படுத்தலால் இந்தி எத்தனை மொழிகளின்பால் தன் பெரும்பிம்பத்தினால் நிழல் படர வைத்திருக்கிறது என்பது நமக்கு தெரிவதில்லை. ...