ஒரு பூட்டப்பட்ட அறைக்குள்
ஒரு பூட்டப்பட்ட அறைக்குள்
அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
அந்த அறைக்கான சாவியும் அவன்தான்.
கடவுள் உள்ளே எட்டிப் பார்க்கிறார்.
பாவம் அவரால்
கதவைத் தட்டத்தான் முடிகிறது.
கதவைத் திறக்க வேண்டுமென்றால்
அந்த சாவி வேண்டும்;
அந்த சாவி வேண்டுமென்றால்
கதவைத் திறக்க வேண்டும்.
கடவுள் காத்துக்கொண்டிருக்கிறார்,
எப்போது அவன் விழிப்பான் என்று.
அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான்,
வேறொரு பூட்டப்பட்ட அறைக்குள்
கடவுளை அடைத்துவிட்ட நிம்மதியில்.
Comments
Post a Comment