Posts

Showing posts from 2012
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கல்லணைக் கிளி

Image
          கரிகால் பெருவளத்தான் தான் கட்டிய கல்லணையை நோட்டம் விட்டபடித் தன் யானை மீது அமர்ந்திருந்தார். அவரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலியில் ‘யானைப் பூங்கா, உள்ளே அனுமதி இல்லை’ என்று போர்டு மாட்டியிருந்தது. அந்த வேலியில் சில மாடுகள் கட்டிப் போடப்பட்டு அதை மேய்த்துக் கொண்டிருந்தவன் கரிகாலருக்கு இணையாக அந்த அதிசயத்தைப் பார்த்துகொண்டிருக்க பூங்காவைச் சுற்றிலும் தார்சாலை போடப்பட்டு ஹாரன் சத்தம் காதைக் கிழித்துக்கொண்டிருந்தது. ஆறுவயதில் நான் சிறுவர் மலரில் பார்த்த கார்ட்டூன் கல்லணை இதுவல்ல, இது என்னமோ சென்னை மெரினா பீச் ரேஞ்சுக்கு திருச்சிராப்பள்ளிக் குரல்களில் கலகலத்துக்கொண்டிருந்தது. பாப்கார்ன், கோன் ஐஸ், மீன் வறுவல், சோளம், என்று அச்சு அசல் திருச்சி பீச்தான் !           யானைகளே நிற்க பயப்படும் அணை மதகுகளினூடே வெண்நாரைகளும் கொக்குகளும் ‘வாடி இருக்குமாம்’ படலத்தை நடத்திக்கோண்டிருக்க, அவைகளின் கணுக்கால் அளவிற்கு ஏதோ தண்ணீர் ஓடியது. கர்னாடக ஷெட்டர்வாளின் சூழ்ச்சியைக் கரிகாலர் சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தார். கொக்குகளைப் பிடிக்க என் ...

Our duties for building an "Equal India"

Image
1. "They should be severely punished" 2. "They should be hanged to death" 3. "Thappu ponnunga melayum irukku, avanga apdi dress panradhaaladhan ipdi nadakkudhu" 4. "They should be beaten to death" 5. "Our Laws should be made more stringent, like there in Dubai" 6. "Avanga akka thangachi-ku ipdi nadandha summa irupaangalaa ?" 7. "Apdiyaa ? Eppo nadandhuchu da, News paakalada naan, ennaachu ?" 8. "Women should carry knives along with them" 9. "I'm ashamed to live in such a country !" 10. "Aambalainga na ? Enna venaalum seyyalaamaa ?" 11. "Does Delhi really deserve to be called as the capital of India ?" These were some of the comments I got from my friends, and I respect all of them. I even saw a post suggesting rapex for women, as women harassment has become very common and is being done very casually here. Where is India really going ? The government, regard...

பிறந்தநாள்

Image
                     ஒரு வயசுக்கு மேல் உலகம் நம் பிறந்தநாளைக் கொண்டாட நாம் பாடுபட வேண்டும் என்று எங்கோ படித்துவிட்டேன், அப்போதிலிருந்து பிறந்தநாள் கொண்டாடுவதை நிறுத்தியாகிவிட்டது. சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று நிறைய பேர் என் வீட்டிற்கு வந்து, நான் வீட்டில் இல்லாததைப் பார்த்து பல்பு வாங்கியிருக்கிறார்கள் (அடுத்த நாள் அதற்காக எனக்கு செமத்தியான அடி விழும், அது வேறு டிபார்ட்மெண்ட்). “நான் என்ன பெரிய காந்தியா நேருவா ?”, என்று பதில் சொல்லி பல கலவரங்களைக் கேண்டீனில் நிகழ்த்தியிருக்கிறேன். பர்த்டே ட்ரீட் என்று யாராவது வாயைத் திறந்தாலே அங்கிருந்து நைசாக நழுவிவிடுவதைப் பார்த்து பார்த்து, இனி பர்ஸை பிக்பாக்கெட் அடிப்பதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு நண்பர்கள் வட்டம் வந்திருப்பதாக விவரமறிந்தோர் கூறுகின்றனர். வருடா வருடம் இவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எங்காவது ஓடிவிடுகிறேன் என்று இந்த வருடம் வித்தியாசமாக ஒரு பிளான் போட்டார்கள். என் அம்மாவுக்கு ஃபோனைப் போட்டு, “இன்னிக்கு எப்படியாவது விஷ்ணுவை வீட்டுல கட்டிப்போட்ருங்கம்மா” என்று சொல்...

கொசுக்கடி, எத்தனையோ அனுபவி !

Image
Courtesy: jokesprank.com “If you think you are too small to make a difference, try sleeping with a mosquito.” - Dalai Lama XIV           ஒரு ஆப்பிரிக்கப் பழமொழியை வழிமொழிந்து தலாய் லாமா கூறிய கருத்தைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். டார்வினின் 'Survival of the fittest' கொள்கைப்படி தற்போது கிட்டத்தட்ட பூமியின் சகல இடங்களிலும் கோலோச்சுவது மனிதன்தான். மனிதனுக்கு முந்தைய காலகட்டங்களில் ஆதிக்க உயிரினங்கள் தங்களின் தேவைக்கேற்பதான் மற்ற உயிர்களை வதம் செய்தன. அதாவது உணவுச் சங்கிலி அறுபடாமல் ஆதிக்கம் செய்தல் என்பது ஒரு மூர்க்கமான உயிரியல் நியதியாகவே இருந்து வந்தது. ஆனால் மனிதனின் காலகட்டத்தில் மற்ற உயிர்களை அழித்தல் என்பது உணவுச் சங்கிலிக்கு அப்பாற்பட்டு ஒரு கட்டுக்குள் அடங்காமல் போக ஆரம்பித்தது. Necessity என்பதற்கும் Luxury என்பதற்கும் இடையே இருக்கும் ஒரு மெல்லிய கோடு பல உயிரினங்களின் பாதுகாப்பின் மேல் கீரல் விழச்செய்தது. மனிதனுக்கு ஆறறிவு வந்த பிறகு அவன் அழிக்க ஆரம்பிக்காத விலங்கினங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவு இயற்கையைச் சுரண்டியிருக்கிறான் மனித...

அன்புமிக்க விஷ்ணுவுக்கு வண்ணதாசன் எழுதிக்கொள்வது

627007 27.07.08 அன்புமிக்க விஷ்ணுவுக்கு, வணக்கம். உங்களுடைய கவிதைகள் 01.04.08ல் அனுப்பப்பட்டு 02.04.08ல் எனக்குக் கிடைத்தன. இந்த மூன்று மாதங்கள் இருபத்தேழு நாட்கள் குறைந்தது நான்கு முறைகளும், இந்த தாமதமான பதிவை எழுதுவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை அவற்றைப் படித்தாயிற்று. முதலில் என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள். * பத்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்புக்கு இப்போது வந்திருப்பீர்கள். வகுப்பு அல்ல, இந்த வயதுதான் முக்கியம். வயது என்பதைவிட இந்தப் பதின்பருவத்தை-Teen age-ஐச் சொல்லலாம். இந்த வளரினம் பருவத்தில்தான், உடல்சார்ந்த விழிப்புக்களும் மனம் சார்ந்த விழிப்புக்களும் நிகழ்கின்றன. இந்தப் பருவத்தில் நாம் எவ்வளவு வெளிச்சத்தில் அல்லது வெளிச்சத்துடன் விழிக்கிறோமோ, அந்த வெளிச்சம்தான் கடைசிவரை நம்மை வழிநடத்தும், கூட வரும். எல்லாக் கலைஞனும் இந்த adolescent பருவத்திலேயே உருவாகிறான். நீங்களும் உருவாகியிருக்கிறீர்கள். உங்கள் கலை கவிதை. அல்லது உங்களது வெளிப்பாடு கவிதை. சிலர் ஓவியம் மூலம், சிலர் இசை மூலம், சிலர் இடுகிற கோலங்கள் மூலமாகக் கூட வெளிப்படுகிறார்கள். ஒவ்வொரு ஊடகமும் ஒரு வாசல...

சிங்காரவடிவேலு சார்

Image
          எஸ்.எஸ்.என். கல்லூரிக்கு வந்து போகிறவர்களுக்கு சிங்காரவடிவேலு சாரைத் தெரியாமல் இருக்காது. ஏராளமான உடம்பின் மேல் அளவெடுத்துத் தைத்த அரைக்கைச் சட்டை ஒன்றை அணிந்துகொண்டு தரையைப் பார்க்கிறாரா நம்மைப் பார்க்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியாதபடி முகத்தை வைத்துக்கொண்டு மெதுவாக, மிக மெதுவாக நம் கல்லூரி வளாகத்திற்குள் வளைய வருபவர். கைகளை எப்பொழுதும் ஒரு தடிமனான புத்தகமும் மூக்குக்கண்ணாடிப் பெட்டியும் சாக்பீஸ் டப்பாவும் அலங்கரிக்க அதை ஒரு சுமையாகக் கருதாமல் சாதாரணமாக சுமந்துக்கொண்டு செல்வார். சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழும், ஆனால் அது தெரியாதவாறு கொழுப்பு அடுக்குகள் மறைத்துவிட அதனால் அவர் கன்னம் அடையும் விசாலத்தில் அவரது இருபது ஆண்டுகால ஆசிரிய அனுபவம் பெரிதும் பயன்தராமல் அவரிடமே தேங்கி நிற்பதுபோல் தோன்றும். ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரியில் புனித இயற்பியலைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத மாணவர்கள் இருப்பது இயற்கையே, இது அவருக்கும் தெரிந்துதான் இருக்கிறதோ என்னவோ, அவரைத் தேடி யார் வந்தாலும் அருகில் உட்கார வைத்து சந்தேகங்களைப் பொறுமையாகத் தீர்த்து வைப...