காமஞ்சேர்த்தாளே!
புலவர்: சில்கிளிச்சிறகார்
திணை: கைக்கிளை
துறை: உட்பொருள் அறியாமையால் காமஞ்சேர்த்தத் தலைவிக்கு எடுத்துரைக்கத் தோழியில்லாமையை எண்ணித் தலைவன் வருந்துதல்
சில்வியப் பாலை சொல்லியப் பின்னும்
சில்லிடைச் சிலையோள் சில்கிளிச் சிறகோள்
பல்லிடை யாடச் சிரித்தனள் - அஃதில்
கல்பக் காமம் கடுகிலு மல்ல
களிநடம் புரியா கண்ணே மணியென
மதியகல் ஏந்தும் மடந்தைத் தோழி
மறைமதி யானாளே - அன்
நன்நலம் நோக்கும் நற்றாய் மகளே
மூலக் கவிதை: சூசகம் - நிலா பாரதி
Comments
Post a Comment