Posts

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

வணக்கம் வாழவைக்கும் சென்னை!

சென்னை என்னை மாற்றிய அளவிற்கு இதுவரை வேறு எதுவும் என்னை மாற்றியதில்லை.           புதிய பள்ளியில் பி.டி.மாஸ்டர் புதிய மாணவர்களைத் தனியாக நிற்க வைத்தார். ஒவ்வொருவரிடமும் எந்த ஊரு, என்ன ஆடுவ என்று விசாரித்துக் கொண்டே வந்தார். நானோ அப்பொழுதுதான் என் வாழ்நாளில் முதன்முதலாக ஒரு கூடைப்பந்து வலையைப் பார்க்கிறேன். அப்படியே வாய்பிளந்து நின்றுகொண்டிருந்தேன். “நீ எந்த ஊரு?” “உன்னைத்தான்டா, பிஞ்சு போன நெட்டையே பாத்துட்டு இருக்க?”, அப்பொழுதுதான் கவனித்தேன். “எந்த ஊரு?” “திருமங்கலம், மதுர கிட்ட” ”ஸ்கூல்ல என்ன ஆடுவ?” “ஹும்ம்ம், கிரிக்கெட்! பெறவு கோலி, கிட்டிபுல், பம்பரம்…”, எதற்கு எல்லோரும் சிரித்தார்கள் என்று அப்பொழுது புரியவில்லை. “என்னடா?” “நெஜமா சார்! நல்லா வ்ளாடுவேன். கிட்டியில எக்ஸ்டிரா கிச்சாங் நான் கேட்டதே இல்ல” “அதெல்லாம் இருக்கட்டும், வேற என்ன ஆடுவ?” “பம்பரத்துல கோஸ் எடுத்துக் காட்டறேன் சார், கையில ரெண்டு நிமிஷம் சுத்தும்…”, சிரிப்பு அதிகமானது. ”என்னடா நக்கலா? புரியாதவன் மாரியே பேசிட்டு இருக்க?”       ...

மீண்டும் வனவாணி

Image
          வருடங்கள் கழித்து நான் படித்த பள்ளிக்கு இன்று சென்றிருந்தேன். நான் ஹேண்ட்பால் விளையாடிய இடத்தில் பிரைமரி ப்ளாக் கட்டிடம் உயர்ந்து நின்று கொண்டிருந்தது. கோல்போஸ்டாக உபயோகித்த மரத்தை வெட்டமுடியவில்லை போலும், கட்டிடத்திற்கு நடுவே நாங்கள் விளையாடியதற்கு சாட்சியாக எங்கள் கிறுக்கல்களை சுமந்துகொண்டு கம்பீரமாகத் தொடர்ந்து உயிர்வாழ்ந்து கொண்டிருந்தது அம்மரம். கிட்டத்தட்ட எனக்கு வகுப்பெடுத்த எல்லா ஆசிரியர்களையும் சந்தித்தேன். “அதோ, யார் வீட்டு எழவோ, பாய் போட்டு அழுவோம்னு நாலு கேஸு அங்க உக்காந்திருக்கு பாரு”, என்றுதான் கடைசி பெஞ்சு மாணாக்கர்களான எங்களை சாய் சார் விளிப்பார். இன்று அதை இன்னொரு முறை சொல்லவைத்து ரெக்கார்ட் செய்யவேண்டும் என்று விரும்பினேன். வந்தவர் பதில் வணக்கம் ஒன்றைப் போட்டுவிட்டு அவ்வளவு பெரிய உடம்புடன் திடீரென்று காணாமல் போனார். புவியியல் ஆசிரியையிடம், “இந்த ப்ரில்லியண்ட் பையன் மேல டஸ்டரைத் தூக்கி அடிச்ச மாதிரி, வேற யாராவது ப்ரில்லியண்ட் பையன் கிடைச்சானா உங்களுக்கு?”, என்று கேட்டேன். ”ஹாஹா, அதுதான்டா முதலும் கடைசியுமா ஒரு பையனை அடிச்சது”, என...

''எப்படியோ மாட்டிக்கிட்டேன்!''

Image
''மனைவியிடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?'' என்று இவர்களிடம் கேட்டபோது... ஆல்பின் மெக்ஃபர்லேன் , தொழிலதிபர்: ''ஒரு நாள் வேலை சீக்கிரம் முடிஞ்சு, ஃப்ரெண்டு ஒருத்தன் கூப்பிட்டானு பார்ட்டிக்குப் போயிட்டு லேட் நைட் வீட்டுக்குப் போனேன். வீட்ல கேட்டதுக்கு 'வேலை ரொம்பா ஜாஸ்தி’னு சொல்லிட்டுப் படுத்துட்டேன். மறுநாள் என் வீட்டுக்கு வந்த ஃப்ரெண்டு, '' நேத்து நைட் பார்ட்டி எப்படி மச்சி?''னு கேட்டுத் தொலைச்சிட்டான். அதை என் பொண்டாட்டியும் கேட்க... அவங்க பார்த்த பார்வை இருக்கே... என்னா திட்டு?'' சிங்காரவடிவேலு, ஆசிரியர்: ''என் மனைவிக்கு ஸ்ரீவைகுண்டம் கோயில் ரொம்பப் பிடிக்கும். முடிஞ்சவரைக்கும் அந்த ஊர்லேயே செட்டிலாகணும்னு ஆசைப்பட்டா. எனக்கும் அந்த ஊர்லேயே வேலை கிடைச்சுது. ஆனா, எனக்கு அங்கே இருக்க விருப்பம் இல்லை. அதனால, எனக்கு அங்கே வேலை கிடைச்ச விஷயத்தை மறைச்சு, சென்னைக்கு வந்துட்டோம். பத்து வருஷத்துக்கப்புறம் இந்த விஷயம் அவளுக்குத் தெரிஞ்சு, கிட்டதட்ட ஆறு மாசம் என்கிட்டப் பேசவே இல்லை. இப்போ பேசினாலும் ...

வாழ்க்கை ஒரு போர்க்களம்!

Image
''போராட்டங்கள், இடையூறுகளால் பாதி வழியில் சிக்கிச் சின்னா பின்னமான  அனுபவம் உண்டா?'' என்று இவர்களிடம் கேட்டபோது... மதன் கார்க்கி, பாடலாசிரியர் : ''எனக்கு அப்போ 12 வயசு இருக்கும். ராத்திரி நல்லாத் தூங்கிட்டு இருந்தேன். திடீர்னு எங்க வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைஞ்சு வீட்டுக்குள்ள சிதறிச்சு. என்ன நடக்குதுன்னே புரியல.  அப்பா உடனே எங்களை  உள்ளேபோய் பத்திரமா இருக்கச் சொல்லிட்டு போலீஸுக்கு போன் பண்ணி விசாரிச்சாங்க. 'ராஜீவ் காந்தியைக் கொலை பண்ணிட்டாங்க. அதுக்காக தி.மு.க. ஆதரவாளர்களை அடிக்கிறாங்க. நாங்க உடனே உங்க வீட்டுக்குப் பாதுகாப்பு தர்றோம்’னு சொன்னாங்க. ஆனா, ஊர் முழுக்க இந்த மாதிரி நிறையக் கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததால போலீஸால் நேரத்துக்கு வரமுடியலை.  அதுக்குள்ள எங்க கார் மேல பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டாங்க. அந்த ராத்திரி முழுக்க திக் திக்குன்னு பயந்துகிட்டே இருந்தோம். அதை இப்போ நினைச்சாலும் பயமா இருக்கும்!'' சேகர், ஆட்டோ ஓட்டுனர் : ''6 மாசத்துக்கு முன்னாடி கத்திப்பாராவுல போலீஸ்காரங்க எங்களை நிறுத்தி வெச்சுட்டாங்க. பாலத்துக்கு அ...

235 எம்.எல்.ஏ.-க்களின் மின்னஞ்சல் முகவரி

234 சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏக்கள் இ.மெயில் முகவரியுடன் நியமன எம்.எல்.ஏவின் முகவரியும் சேர்த்தும் மொத்தம் 235 எம் எல் ஏக்களின் இ. மெயில் முகவரி கீழே கொடுக்கபட்டுள்ளது: 1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in 2 Alandur - mlaalandur@tn.gov.in 3 Alangudi - mlaalangudi@tn.gov.in 4 Alangulam - mlaalangulam@tn.gov.in 5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in 6 Anaicut -- mlaanaicut@tn.gov.in 7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in 8 Andimadam --- mlaandimadam@tn.gov.in 9 Andipatti----mlaandipatti@tn.gov.in 10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in 11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in 12 Arantangi-- mlaarantangi@tn.gov.in 13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in 14 Arcot --- mlaarcot@tn.gov.in 15 Ariyalur --mlaariyalur@tn.gov.in 16 Arni -- mlaarni@tn.gov.in 17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in 18 Athoor--- mlaathoor@tn.gov.in 19 Attur ---mlaattur@tn.gov.in 20 Avanashi ---mlaavanashi@tn.gov.in 21 Bargur ---mlabargur@tn.gov.in 22 Bhavani---mlabhavani@tn.gov.in 23 Bhavanisagar---...

இந்த செய்தி ஒன்றும் புதிதல்ல

Image
          இந்த செய்தி ஒன்றும் புதிதல்ல. வருடா வருடம் நடந்து வருவதுதான். 1063 மதிப்பெண்களுக்கு மருத்துவ சீட் கிடைக்காது என்ற காரணத்திற்காக நெல்லையில் ஒரு +2 மாணவி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 'இது அப்பெண்ணின் தனிப்பட்ட முடிவு, கல்விமுறையிலோ சமூகத்திலோ குற்றமிருந்தால் குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய அனைவருமே தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும்’, என்று இன்னமும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒழுங்காகக் கல்வியைக் கற்றுத் தருகிறதோ இல்லையோ, மதிப்பெண்கள்தான் வாழ்க்கை என்ற எண்ணத்தை எங்களுக்குள் விதைத்ததுதான் இந்த கல்விமுறை செய்த மகத்தான சாதனை. இந்தப் போட்டி நிறைந்த உலகில் வேறு வழி இல்லை என்று ஒரு வாதம் வேறு வைக்கப்படுகிறது. கல்விமுறை ஒழுங்காக இருக்கிறதோ இல்லையோ, எங்களது கல்விச்சூழல் நிச்சயம் சரி இல்லை. மாணவ மாணவிகள் நிறைய மதிப்பெண்கள் எடுக்கட்டும், அதில் தவறேதும் இல்லை. அதிக மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களின் கடின உழைப்பு நிச்சயமாகப் பாராட்டுக்குரியது. ஆனால், அதிக மதிப்பெண்கள் வாங்காவிட்டால் உன் வாழ்க்கையே அவ்வளவுதான் என்ற மாயத் தோற்றத்தை இந்த சமூ...

இது வெறும் ஆரம்பம்தான்

இன்று எனக்கு நன்றாகத் தூக்கம் வரும் என்று நினைக்கிறேன். 721 பேரின் வாழ்க்கையை மீட்டெடுத்ததில் அடியேனுக்கும் சிறு பங்கு இருக்கிறது என்று எண்ணும்போது எதையோ சாதித்த உணர்வு மேலிடுகிறது. தமிழக முதல்வரின் ஏழைகளுக்காக இலவச வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காகப் புணரமைக்கப்பட்ட கால்நடை மருத்துவனைகளில் பணி நியமனம் செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் 843 பேர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் 15 வருட சர்வீஸ் போட்டு மாதத்திற்கு ஒன்றரை லட்சம் வரை தனியார் நிறுவனங்களில் சம்பளம் வாங்கி வந்தவர்கள், ஆயினும் அரசு வேலையாயிற்றே என்று அதை உதறித் தள்ளிவிட்டு அரசு கால்நடை உதவி மருத்துவர்களாக சென்ற வருடம் பணி நியமனம் பெற்றனர். இந்நிலையில் ஏப்ரல் 28ம் தேதி இந்தப் பணியிடங்களுக்கு ஓப்பன் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வர, அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார்கள். ஒரே வருடத்தில் நடுத்தெருவுக்கு வந்துவிடும் அளவிற்கு அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியானது. இதை விடக்கூடாது என்று நானும் திலீபன்...