“ஆண்”
பெண்களுக்கெதிரான வன்கொடுமை பற்றி
ஓவியம் ஒன்று வரையத் துவங்கினேன்.
பத்து நிமிடங்கள் கழித்து
கலைந்த கூந்தலுடன்
நழுவிய சீலையைக்கூட பொருட்படுத்தாமல்
முகத்தைக் கைகளால் தற்காத்தபடி
அவள் அழுதுகொண்டிருந்தாள்.
திடீரென்று அவளுடைய கண்கள்
என்னைப் பார்த்துக் கெஞ்சின,
தன்னை அடிக்க வேண்டாம் என்று.
கருணையுடன் அவளை நோக்கினேன்.
அப்பொழுது அவள் கண்கள்,
“இப்படி அடிக்கிறாயே,
நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?”, என்று கத்தியது.
திடீரென்று வந்ததே பாருங்கள் கோபம்.
“என்ன திமிர் இவளுக்கு!”, என்று ஆவேசத்துடன்
அவளுடைய கணவனை வரைந்து
அவள் கைகளை விலக்கி
கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தேன்.
- வ.விஷ்ணு
Comments
Post a Comment