மேஜர் தம்பி
தம்பிக்கு இன்றோடு 18 வயதாகிறது. திடீரென்று சென்ற மாதம் “வோட்டர் ஐடி ரெஜிஸ்டர் பண்ணணும், கூட வா” என்று அவன் கூப்பிட்டபோது மலைப்பாக இருந்தது. ஒன்னாங்கிளாஸ் படிக்கையில் டீச்சர் ஒவ்வொருவராக எழுப்பி எத்தனை அக்கா தங்கச்சி அண்ணன் தம்பி என்று கேட்டுக்கொண்டிருந்தார். ஒவ்வொருவராக எழுந்து இரண்டு அக்கா என்றோ, ஒரு தம்பி என்றோ சொல்லி உட்கார்ந்தனர். எனக்கு அது என்னமோ மார்க் போலத் தோன்றியதோ என்னவோ, என் முறை வந்ததும் எனக்கு யாரும் கூட இல்லை என்று அழுதுகொண்டே சொன்னேன். மொத்த கிளாசும் சிரித்ததும், அதை வீட்டிற்கு வந்து விசும்பிக்கொண்டே சொன்னதும் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது.
பிறந்த நாள் பரிசாக இரண்டு புத்தகங்களைக் கொடுத்திருக்கிறேன். “உனக்குள் இருக்கும் சிறுவனுக்கு” என்று எழுதி ‘Diary of a Wimpy Kid'-டின் புதிய புத்தகம் ஒன்று. சிறு வயதிலிருந்தே அவன் அப்புத்தகத்தை வாங்கி சேமித்துக்கொண்டிருக்கிறான். இது பதினொன்றாவது புத்தகம் என்று நினைக்கிறேன். இன்னொரு புத்தகமாக எதைக்கொண்டுக்கலாம் என்று எனக்கு யோசிக்க அவசியமே இருக்கவில்லை. இதை இவ்வளவு தாமதமாக வாசித்துவிட்டோமே, அது சற்றே சீக்கிரம் என் கைக்கு வந்திருக்கலாமே என்று அடிக்கடி ஒரு புத்தகத்தை நினைத்து வருந்துவேன். அது, டாக்டர் அம்பேத்கர் எழுதிய 'Annihilation of Caste'. “உனக்குள் இருக்கும் வளர்ந்தவனுக்கு” என்று எழுதி அதைப் பரிசளித்திருக்கிறேன். ஆதிக்க அடையாளங்களைக் கிட்டத்தட்ட அவன் ஏற்கனவேயே துறந்துவிட்டான். ஆனால் அவ்வடையாளத்தைத் துறப்பதோடு நிற்காமல், எவ்வாறு அவை கொடுக்கும் சலுகைகளையும் நிராகரிக்கவேண்டும், ஒத்துணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அப்புத்தகம் அவனுக்கு வழிகாட்டலாம். மேலும் இந்திய சமூகம் குறித்த பார்வையை அளித்து அவன் அதில் எங்கிருக்கிறான் என்பதை உணர்த்தலாம். 18 வயதில் நான் தவறவிட்ட புத்தகம், அவன் படிக்கட்டும் என்ற ஆசையில் கொடுத்திருக்கிறேன்.
“18 வயசு ஆயிடிச்சு, அடல்ட் படத்துக்குப் போகப்போறேன், எவனும் என்னைத் தடுக்க முடியாது!” என்று இன்று வடசென்னை போனான். இவன் பால் வடியும் முகத்தைப் பார்த்து தடுத்து நிறுத்தி ஐடி கார்டைக் காட்டு என்றிருக்கிறார்கள். இன்னிக்கு பர்த்தே ப்ரோ என்று இளித்தபடி ஐடி கார்டை நீட்ட, “அட, ஹேப்பி பர்த்தே” என்று உள்ளே அனுப்பிவிட்டார்கள். “At lastttt!" என்று தியேட்டருக்குள்ளிருந்து ஏக மகிழ்ச்சியாக மெசேஜ் அனுப்பினான் (இரண்டு வாரங்களுக்கு முன்பு போனான், போடா சின்னப்பையா என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள்).

Comments
Post a Comment