என்னியோ மாரிகோனி
சில பாடல்களைக் கேட்கும்போது, சில படங்களைப் பார்க்கும்போது டைம் டிராவல் செய்ய வேண்டும் என்ற இச்சை கட்டுக்கடங்காமல் வரும். ஸ்பேஸ் ஒடிசி திரைப்படத்தின் டைட்டில் கார்டை என் 15 இன்ச் லேப்டாப்பில் பார்த்தபோது என்னத்துக்குடா லேட்டா பொறந்த என்று கடுப்பாக இருந்தது. 1968ல் பெரிய திரையில் அந்த டைட்டில் ஓடும்போது கூட்டத்தோடு கூட்டமாக நானும் வாயைப் பிளந்தபடி நுகர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அதே போல் சில பாடல்களைக் கேட்கும்போது "இதை ரிக்கார்டிங் ரூமில் நூறு வாத்தியங்கள் முழங்க உருவாக்கும்போது கூட இருந்திருக்க வேண்டும்" என்று தோன்றும். காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் 'நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா' பாடலை எப்பொழுது கேட்டாலும் டைம் டிராவல் செய்து அதன் ரிக்கார்டிங்கைப் பார்க்க வேண்டும் என்று ஏக்கமாக இருக்கும்.
அதேபோல்தான் இந்தப் பாடல். பேரரக்கன் என்னியோ மாரிகோனி போட்ட இசை. கில்பில் படத்தின் என்ட் கார்டில் 'நவஜோ ஜோ' என்று ஒரு படத்தின் பெயர் வித்தியாசமாக இருக்கவே, சரி பார்ப்போமே என்று பார்த்தேன். அது நவஜோ இல்லை, நவஹோ என்ற தகவலைத் தவிர அத்திரைப்படத்தில் எனக்கு வேறு எதுவும் உருப்படியாக இல்லை. ஹீரோ பர்ட் ரெனால்ட்ஸ், இயக்குனர் செர்ஜியோ கார்புச்சி பற்றியெல்லாம் பிறகுதான் தெரிந்துகொண்டேன். ஆனால் ஒன்றே ஒன்று. படத்தின் இசை தாறுமாறாக இருந்தது. என்னியோ மாரிகோனியின் நவஹோ ஜோ இசையை கில்பில் படத்தில் டரன்டினோ பயன்படுத்தியிருந்ததால் என்ட் கார்டில் கிரெடிட் கொடுத்திருந்தார். அந்த கார்டைப் பார்த்துதான் நான் இந்த இசையைக் கண்டடைந்தேன். இரவு நேரத்தில் நெருப்பைச் சுற்றி கூட்டமாக உட்கார்கிறோம். அந்தக் கூட்டத்தின் மூத்த தாத்தா ஒருவர் "அந்தக் காலத்துல நவஹோ ஜோன்னு நம்ம முப்பாட்டன் வாழ்ந்தான், அவனுடைய புகழை இப்போது பாடப்போகிறேன்" என்று ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? அந்த உணர்வை இப்பாடல் தரும். நவஹோ ஜோவின் காவியம் துவங்கப்போகிறது, கேளுங்கள் என்று இசை ஆரவாரமாகத் துவங்கும் (படம் அவ்வளவு பெரிய காவியம் எல்லாம் இல்லை. ஆனால் எபிக் இசை என்றால் இதுதான்).
இந்தப் படத்தில் 'டெத் ஆஃப் பார்பரா அன்ட் தி ரிட்டர்ன் ஆஃப் ஜோ' என்று ஒரு இசை இருக்கும். அதைத்தான் கில்பில்லில் டரன்டினோ உபயோகித்திருந்தார். ஒரு நாள் ஹாஸ்டலில் தூங்கிக்கொண்டிருந்தபோது என் பஸ் ஆக்சிடன்ட் சம்பவம் கனவாக வந்து நடுராத்திரியில் அடித்தெழுப்பியது. தூக்கிவாரிப்போட்டபடி எழுந்தேன். சட்டென்று உயிர் பயம் கட்டுக்கடங்காமல் எகிற, லைட்டைப் போட்டு "எனக்கு ஏதேனும் ஆகிவிட்டால், அடக்கம் செய்வதற்கு முன் இந்த இசையை ஒலிக்கவிடுங்கள்" என்று எழுதினேன். இப்பொழுது அதைப் படிக்க எப்படி இருக்கிறதோ, ஆனால் அப்பொழுது வந்த அந்த அட்ரீனலின் கார்டிசால் ரஷ் நிஜம். அந்த இசை என் ஊர்வலத்தில் ஒலித்தே ஆகவேண்டும் என்ற இச்சைதான் எல்லாவற்றையும் விட முன்னே நின்றிருக்கிறது. அதுவே அந்த இசையை எனக்கு மிகவும் நெருக்கமானதாக ஆக்குகிறது (இசை வேண்டுவோர் கூகுளில் தேடவும்).
இதையெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால், என் அரக்கர் குல திலகம் என்னியோ மாரிகோனி நேற்று 90வது வயதைத் தொட்டிருக்கிறார். இந்தக் குலசாமி புண்ணியத்தில்தான் சொந்தமாக பக்கர் விசில் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இவரும் பீட்டர் டிராவிசும் இணைந்து உருவாக்கிய பாடல்களை எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எங்கோ சம்பந்தமில்லாத ஒரு நாட்டில் உள்ள 90 வயது தாத்தாவின் உள்ளங்கையை முத்தமிடத் தோன்றுகிறது. இந்தாள் சேர்த்து வைத்திருப்பது உலகம் முழுவதிலுமிருந்து வந்தபடி இருக்கும் இந்த முத்தங்களைத்தான். மற்றபடி இவர் அரிதாக வாயைத் திறக்கும்போது விடும் லூஸ் டாக்கை ஞானச் செருக்காகக் கருதி விட்டுவிட வேண்டும். லுங்கா வீட்டா அல் மாய்ஸ்த்ரோ! ப்வான் காம்ப்ளியானோ _/\_

Comments
Post a Comment