மகிழ்வன், மகிழினி
“இந்தியாவில் 60-120 மில்லியன் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருக்கிறார்கள்”, என்ற அதிர்ச்சித் தகவலுடன் முடிந்தது அத்திரைப்படம். சராசரி எடுத்தால் கிட்டத்தட்ட தமிழகத்தின் ஜனத்தொகைக்கு நிகராக இருக்கும் அவர்களைப் பற்றி நாம் எப்படிப்பட்ட பார்வையைக் கொண்டிருக்கிறோம்? உங்கள் பக்கத்துவீட்டு நபரோ, உங்களது நெருங்கிய நண்பரோ, ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏன், இதைப் படிக்கிற நீங்கள் கூட உங்களது பாலியல் விருப்பத்தை இந்த சமூகத்திடம் மறைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஓரினச் சேர்க்கையாளர்களையும் திருநங்கையரையும் இந்தியச் சமூகம் எந்த இடத்தில் வைத்திருக்கிறது? LGBT(Lesbian Gay Bisexual Transgender) என்றழைக்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர் மற்றும் திருநங்கையர் குழுவான ‘சென்னை தோஸ்த்’ சென்னையில் மூன்று நாட்கள் ரெயின்போ திரைப்பட விழாவினை நடத்தியது. ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், அவர்களது முன்னேற்றத்தில் பங்கு கொள்ள நினைப்பவர்கள், ஆகியோர் பல்வேறு மொழிகளில் இயக்கிய சிறந்த குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. நடனக் கலைஞரான அனிதா ரத்னமும் ஊடகவியலாளர் அப்சரா ...